Share Market Today: பங்குச்சந்தை தொடர்ந்து 2வதுநாளாகச் சரிவு: சென்செக்ஸ் 350 புள்ளிகள் வீழ்ச்சி மும்பை மற்றும்

By Pothy RajFirst Published Dec 29, 2022, 9:38 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வதுநாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 300புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2வதுநாளாக இன்றும் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 300புள்ளிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.

அமெரிக்காவில் பங்குப்பத்திரங்கள் மூலம் கிடைக்கும் ஆதாயம் அதிகரித்திருப்தால் வரும்காலங்களில் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தலாம் என சந்தையில் நம்பப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் சீனாவில் கொரோனாதாக்கம் குறையாமல் இருப்பதால், உலகின் 2வது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டில் பொருளாதாரம் இயல்புநிலைக்கு வருவதற்கு இன்னும் காலமாகும் என்பதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையிழந்தனர். கச்சா எண்ணெய் விலை உயர்வும் முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது.

பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: சென்செக்ஸ், நிப்டி சரிவு: எரிவாயு, எரிசக்தி பங்குகள் லாபம்

இதனால் ஆசியப் பங்குச்சந்தையில் பெரும்பாலான நாடுகளில் வர்த்தகம் இன்று சரிவுடன் காணப்பட்டது. அந்த எதிரொலி இந்தியச் சந்தையிலும் காலை முதலே  காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும்போதே சரிவுடன் இருந்தது.

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி: என்ன காரணம்?

காலையில் வர்த்தகம் தொடங்கும்போது மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 344 புள்ளிகள் வீழ்ந்து, 60,565 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 99 புள்ளிகள் குறைந்து, 18,022 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில் பார்திஏர்டெல், சன்பார்மா, எஸ்பிஐஎன் ஆகிய பங்குகள் மட்டுமே லாபத்தில் உள்ளன. மற்ற பங்குகள் அனைத்தும் சரிவில் உள்ளன. 

நிப்டியில் ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுஸூகி, எய்ச்சர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், லார்சன் அன்ட்டூப்ரோ, கிராஸிம், ஹெச்டிஎப்சி லைப் ஆகிய பங்குகள் விலை சரிந்தன. டாக்டர் ரெட்டீஸ் லேபரட்ரீஸ், டிவிஸ் லேப்ஸ், சிப்லா, பார்திஏர்டெல், சன்பார்மா  பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

பங்குச்சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ் 360 புள்ளிகள் ஏற்றம்! நிப்டி மீண்டும் எழுச்சி

நிப்டியில் மருந்துத்துறை பங்குகள் மட்டும் லாபத்தில் செல்கின்றன மற்ற துறைப் பங்குகள் சரிவில் உள்ளன

click me!