தங்கம் விலை நேற்று மாறாமல் இருந்தநிலையில், இன்று சவரனுக்கு ரூ.150க்கு மேல் உயர்ந்துள்ளது. மீண்டும் சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது.
தங்கம் விலை நேற்று மாறாமல் இருந்தநிலையில், இன்று சவரனுக்கு ரூ.150க்கு மேல் உயர்ந்துள்ளது. மீண்டும் சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 19 ரூபாயும், சவரனுக்கு 152 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,086ஆகவும், சவரன், ரூ.40,688ஆகவும் இருந்தது.
தங்கம் விலை தொடர் உயர்வு!ரூ. 41 ஆயிரத்தை நெருங்குகிறது! இன்றைய நிலவரம் என்ன
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(புதன்கிழமை) கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து ரூ.5,105ஆகவும், சவரனுக்கு 152 ரூபாய் அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 840ஆக உயர்ந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,105க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 3 நாட்களாக விலை உயர்ந்தநிலையில் நேற்று மாற்றமில்லாமல் இருந்தது. ஆனால், இன்று மீண்டும் விலை அதிகரித்து சவரனுக்கு ரூ.152 உயர்ந்துள்ளது.
போக்குகாட்டும் தங்கம் விலை! கணிக்க முடியாமல் மிடில்கிளாஸ் மக்கள் குழப்பம்! நிலவரம் என்ன?
தங்கம் விலை சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்குவது நடுத்தர மக்களுக்கும், நகை வாங்க நினைப்போருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடு விலக்கலால் பொருளாதாரம் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கும் பட்சத்தில் வரும் நாட்களில் தங்கத்தின் விலையும் உயரும்.
வெள்ளி விலையில் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 60 பைசா உயர்ந்து, ரூ.74.60ஆக அதிகரித்துள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து, ரூ.74,600 ஆக ஏற்றம் கண்டுள்ளது