Share Market Today: சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி: என்ன காரணம்?

By Pothy RajFirst Published Dec 28, 2022, 9:53 AM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடந்த இரு நாட்களாக உயர்வுடன் முடிந்தநிலையில் இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடந்த இரு நாட்களாக உயர்வுடன் முடிந்தநிலையில் இன்று சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

அமெரிக்கப் பங்குச்சந்தை கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப்பின் நேற்று திறக்கப்பட்டது ஆனால் பெரிதாக உயர்வு ஏதும் இல்லாமல் மந்தமாகவே வர்த்தகம் நடந்தது.

பங்குச்சந்தையில் உற்சாகம்! சென்செக்ஸ் 360 புள்ளிகள் ஏற்றம்! நிப்டி மீண்டும் எழுச்சி

 சீனாவில் வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதால், நேற்று வர்த்தகம் சாதகமாக இருந்தது. ஆனால், அதிகரித்து வரும் கொரோனா பரவலால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும் என்ற கவலை முதலீட்டாளர்கள் மத்தியில் நீடிக்கிறது.

ஆசியப் பங்குச்சந்தைகளும் இன்று காலை முதல் பெரிதாக உயராமல் மந்தமாகவே உள்ளன, கச்சா எண்ணெய் விலை உயர்வும் இந்திய முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. அந்நிய முதலீடு வரவு குறைவு, சர்வதேச காரணிகளும் முதலீட்டாளர்களுக்கு அவநம்பிக்கையை அளிக்கின்றன. 

இதைவிட, ஆண்டின் கடைசி என்பதால், முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்று லாபத்தை எடுக்கும் முடிவில் இருப்பதால், சந்தையில் சரிவு காணப்படுகிறது

காலை வர்த்தகம் தொடங்கும் முன்பே மும்பை பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. காலை வர்த்தகம் தொடங்கியதும், மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 75 புள்ளிகள் குறைந்து, 60,852 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 22 புள்ளிகள் சரிந்து,18,110 புள்ளிகளில் வர்த்தகம் செய்கிறது

பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: சென்செக்ஸ் வீழ்ச்சி! நிப்டி 18,000-க்கு கீழ் சரிவு

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், 12 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் 18 நிறுவனப் பங்குகள் சரிவிலும் உள்ளன. பவர்கிரிட், என்டிபிசி, டைட்டன், இன்டஸ்இன்ட் வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஏசியன்பெயின்ட்ஸ்,  ஹெச்டிஎப்சி, லார்சன் அன்ட்டூப்ரோ, சன்பார்மா, மாருதி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ்ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன.

நிப்டியில் தகவல் தொழில்நுட்பம், ஊடகம், நிதிச்சேவை, பொதுத்துறை வங்கிப்பங்குகள் விலை குறைந்துள்ளன. ஆட்டோமொபைல், மருந்துத்துறை, உலோகம், எப்எம்சிஜி, வங்கி ஆகிய துறைகளின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு: உலோகம், psu பங்கு லாபம்

நிப்டியில் ஹின்டால்கோ, இன்போசிஸ், ஓன்ஜிசி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ ஆகிய பங்குகள் அதிக சரிவைச்சந்தித்துள்ளன, பவர்கிரிட், என்டிபிசி, டிவிஸ் லேப்ஸ், யுபிஎல், ஏசியன் பெயின்ட்ஸ் பங்கு விலைஉயர்ந்துள்ளன

click me!