
தங்கம் விலை கடந்த 3 நாட்களாக உயர்ந்தநிலையில் இன்று எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது
தங்கம் விலை நேற்றைய விலையிலேயே இன்றும் நீடிக்கிறது. தங்கம் விலை அதிகரிக்காமல் அதே விலையில் நீடிப்பது நகைப்பரியர்களகுக்கும், நடுத்தரக் குடும்பத்தினருக்கும் ஓரளவுக்கு ஆறுதலான செய்தியாகவே அமைந்துள்ளது.
PPF, செல்வமகள் சேமிப்புத் திட்டம்,முதியோர் சேமிப்புத் திட்டத்துக்கு வட்டி உயருமா?
ஆனால் தங்கத்தின் விலையை கடந்த வாரத்தில் கணிக்க முடியாத நிலையில், தினசரி கடும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் நேற்று விலை அதிகரித்தநிலையில் இன்று மாற்றமில்லாமல் நீடிக்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செவ்வாய்க்கிழமை) கிராம் ரூ.5,086ஆகவும், சவரன் ரூ.40 ஆயிரத்து 688ஆக நீடிக்கிறதுகோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,086க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை கடந்த 3வது நாளாக உயர்ந்த நிலையில் இன்று எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் நீடிக்கிறது. கடந்த வாரத்தில் சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் பின்னர் படிப்படியாகக் குறைந்தது. கடந்த 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கம் விலை தொடர் உயர்வு!ரூ. 41 ஆயிரத்தை நெருங்குகிறது! இன்றைய நிலவரம் என்ன
வெள்ளி விலையில் இன்றும் மாற்றவில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.00ஆகவும். வெள்ளி கிலோ ரூ.74,000 ஆகவும் மாற்றமில்லாமல் இருக்கிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.