
பிபிஎப்(ppf) மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், கிசான் விகாஸ் பத்திரம், சுகன்யா சம்ரிதி யோஜனா(ssy) ஆகிய சேமிப்புத் திட்டங்களுக்கு டிசம்பரில் வட்டிவீதம் மாற்றம் அமைக்கப்படும் எனத் தெரிகிறது.
இதில் நீண்டகாலமாக செல்வ மகள் சேமிப்புத்திட்டம், முதியோர் சேமிப்புத் திட்டத்துக்கு வட்டிவீதம் உயர்த்தப்பட்டவில்லை. நாட்டில் பணவீக்கம் அதிகரி்த்துள்ளநிலையில், ரிசர்வ் வங்கியும் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளதால், மத்திய அரசு 3-ம் காலிறுதிகடைசியில் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ. கடன் மோசடி வழக்கு:வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் கைது:சிபிஐ அதிரடி
தற்போது முதியோர் சேமிப்புத் திட்டத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் 20 புள்ளிகள் உயர்த்தி 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மற்ற சேமிப்புத் திட்டங்களான கிசான் விகாஸ் பத்திரம் மற்றும் அஞ்சலக வைப்புத் திட்டம் ஆகியவற்றுக்கு முறையே 10 மற்றும் 30 புள்ளிகள் உயர்த்தப்பட்டது.
பிபிஎப் திட்டத்துக்கு 7.1 சதவீதமும், தங்கமகள் சேமிப்புத் திட்டத்துக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டில் பிபிஎப் திட்டத்துக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டநிலையில் அதை 2020, ஏப்ரல் ஜூனில் 7.1 சதவீதமாக அரசு குறைத்தது.
கடந்த அக்டோபர் மாதத்தில் முதியோர் சேமிப்பு, கிசான்விகாஸ் பத்திரம், அஞ்சல வைப்பு நிதி ஆகியவற்றுக்கு 10 முதல் 30 புள்ளிகள் வரை வட்டியை மத்தியஅரசு உயர்த்தியது. ஆனால், அதன்பின் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி வீதத்தை தொடர்ந்து உயர்த்தியுள்ளதால், மத்திய அரசும் டிசம்பரில் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியை உயர்த்தும் என நம்பப்படுகிறது.
அதானி எபெக்ட்!2022ம் ஆண்டில் உலகளவில் சிறப்பாக செயல்பட்ட பங்குச் சந்தைகளில் இந்தியா முதலிடம்
முதியோர் சேமிப்புத் திட்டத்துக்கு கடந்த 2018, அக்டோபர் டிசம்பர் காலாண்டு முதல் 2019, ஏப்ரல்-ஜூன் காலாண்டு வரை 8.7% வட்டி வழங்கப்பட்டது. அதன்பின் ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைத்ததைத் தொடர்ந்து மத்திய அரசும் வட்டியைக் குறைத்தது.
ஆனால், தற்போதுரிசர்வ் வங்கி 225 புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது, டிசம்பர் இறுதியில் வட்டி மறுஆய்வின்போது மத்திய அ ரசும் சிறுசேமிப்புகளுக்கான வட்டியை உயர்த்தலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.