2022ம் ஆண்டில்உலகளவில் சிறப்பாகச் செயல்பட்ட பங்குச்சந்தைகளில் இந்தியப் பங்குச்சந்தைகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன என ப்ளூம்பெர்க் செய்தி வெளியி்ட்டுள்ளது
2022ம் ஆண்டில்உலகளவில் சிறப்பாகச் செயல்பட்ட பங்குச்சந்தைகளில் இந்தியப் பங்குச்சந்தைகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன என ப்ளூம்பெர்க் செய்தி வெளியி்ட்டுள்ளது
உலகளவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் வட்டிவீதத்தை உயர்த்தியபோதிலும், பொருளாதார மந்தநிலைக்கு மத்தியிலும் இந்தியப் பங்குச்சந்தைகள் சிறப்பாகச் செயல்பட்டு முதலிடத்தைப் பிடித்துள்ளன.
2022ம் ஆண்டில் மும்பை பங்குச்சந்தை 3 சதவீதம் உயர்ந்துள்ளு. உலகளவில் சிங்கப்பூர், இந்தோனேசியா சந்தைக்கு அடுத்தார்போல் மும்பை பங்குச்சந்தை அதிக உயர்வைப் பெற்றுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. கடன் மோசடி வழக்கு:வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் கைது:சிபிஐ அதிரடி
இந்தியச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு கிடைத்த தொடர்ச்சியான லாபம் காரணமாக, பிரிட்டன் சந்தையைவிட பெரிதாக மாறியது, அனைத்து நாடுகளின் உலக இன்டெக்ஸ் குறியீடு 20% சரிந்தநிலையிலும் இந்தியச் சந்தை சிறப்பாகச் செயல்பட்டது.
இந்திய தொழிலதிபர் கெளதம் அதானியின் நிறுவனப் பங்குகள்தான் அதிகமான லாபத்தை முதலீட்டாளர்களுக்கு ஈட்டிக்கொடுத்துள்ளன. அதேநேரம் சில தகவல்தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளும் மோசமாகச் செயல்பட்டு முதலீட்டாளர்களுக்கு இழப்பைக் கொடுத்துள்ளன.
இந்த ஆண்டு இருந்த சிறப்பான செயல்பாடு அடுத்த ஆண்டு இருக்குமா எனத் தெரியாது. சீனா மற்றும் தென் கொரியாவில் அதிகரித்துவரம் கொரோனா பரவல், பொருளாதார மந்தநிலையால் அடுத்த ஆண்டு சரிவைச் சந்திக்கலாம் என கோல்ட்மேன் சாஸ் குழுமம் தெரிவித்துள்ளது
2022ம் ஆண்டில் கவனம் ஈர்த்த பங்குகள்
அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் பங்குகள் மதிப்பு இந்த ஆண்டில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதேபோல அதானி பவர் நிறுவனப் பங்குகள் மதிப்பும் உயர்ந்துள்ளது. அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவன பங்கு மதிப்பு 113% அதிகரித்து நிப்டி 50 நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளது. உணவுப் பொருட்கள் விற்பனையில் இருக்கும் அதானி வில்மர் குழுமப் பங்குகள் இந்த ஆண்டு 24 சதவீதம் லாபமடைந்துள்ளன.
இலவச விமான டிக்கெட், பணம் வாபஸ் ! விமான டிக்கெட் விதிமுறையில் மத்திய அரசு விரைவில் புதிய மாற்றம்
வங்கி பங்குகள்
இந்த ஆண்டு வங்கிப் பங்குகள் மதிப்பு 18 சதவீதம் உயர்ந்துள்ளன. கடந்த காலங்களில் கடனில் சிக்கியிருந்த பல்வேறு வங்கிகள் மதிப்பு உயர்ந்துள்ளன. டெபாசிட் மற்றும் கடனுக்கு இடையே இடைவெளி இருந்தநிலையில் பணவீக்கம் காரணமாக ஆர்பிஐ வட்டியை உயர்த்தியன் விளைவாக வங்கிப்பங்குகள் மதிப்பு படிப்படியாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கிப் பங்குமதிப்பு 25 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஐபிஓக்கள் மோசம்
2022ம் ஆண்டில் பலநிறுவனங்கள் வெளியிட்ட ஐபிஓக்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. பேடிஎம் ஐபிஓ வெளியிட்டு நிலையில் அதன் மதிப்பு 50% சரிந்தது. ஜோமேட்டோ, நைக்கா, டெல்லிவெரி, எல்ஐசி பங்கு மதிப்பு ஆகியவை எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படவில்லை. மே மாதம் நடந்த ஐபிஓவில், எல்ஐசி ஐபிஓ மொத்த மதிப்பு பேடிஎம் ஐபிஓ மதிப்பைவிட அதிகரித்து சாதனை படைத்தாலும் பெரிதாக முதலீட்டாளர்களுக்கு லாபம் ஈட்டவில்லை.
மென்பொருள்துறை சரிவு
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வெளிப்பணி ஒப்படைப்பு மூலம் பணியாற்றும் நிறுவனங்கள் மோசமான பாதிப்பை அடைந்தன. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை காரணமாக, மென்பொருள் நிறுவனப் பங்குகள் சரிவைச்சந்தித்தன. குறிப்பாக இன்போசிஸ், டிசிஎஸ், கடந்த 2008ம் ஆண்டுக்குப்பின் பெரிய பின்னடைவைச் சந்தித்தன.
பான் எண்-ஆதார் கார்டை இணைத்துவிடுங்கள்: வருமான வரித்துறை புதிய எச்சரிக்கை
மருந்துத்துறை பங்கு
அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளின் விலை சரிந்ததால், மருந்து ஏற்றுமதியாளர்களான அரபிந்தோ பார்மா லிமிடெட் மற்றும் திவிஸ் லேபரட்டரீஸ் லிமிடெட் ஆகியவையும் பாதிக்கப்பட்டன.
2022ம் ஆண்டில் இந்தியப் பங்குச்சந்தையில் இருந்து 18100 கோடி டாலர் முதலீட்டை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர் இது கடந்த 2008ம் ஆண்டு பொருளாதார மந்தநிலை இருந்தபோது திரும்பப் பெறப்பட்ட முதலீட்டைவிட அதிகம் என்று செபி தெரிவித்துள்ளது.
2008ம் ஆண்டில் 13300 கோடி டாலருக்குத்தான் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பஎடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகவங்கி கடந்த 6ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் உலக நாடுகளில் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள், பணவீக்கம், வட்டிவீத உயர்வு, பொருளாதார மந்தநிலை நிலவியபோதிலும் அதில் பெரிதாக பாதிக்காமல் பொருளதாரத்தை இந்தியா சிறப்பாக நகர்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளது.