மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று பிற்பகலில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று பிற்பகலில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நண்பகல் 12 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த நிர்மலா சீதாராமன் திடீரென அனுமதி்க்கப்பட்டார். அவருக்கு உடல்ரீதியான என்ன பிரச்சினை, அனுமதிக்கப்பட்ட காரணம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையின் தனி அறையில் நிர்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டார்.
நிர்மலா சீதாராமனுக்கு வயிற்றில் லேசான பிரச்சினை இருந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்றுப்பிரச்சினை மட்டுமின்றி, வழக்கமான உடல்பரிசோதனையும்நடந்தது. இதில் நிர்மலா சீதாராமன் இயல்பாக உள்ளார். விரைவில் வீட்டுக்குத் திரும்புவார் என நிதிஅமைச்சக வட்டராங்கள் தெரிவித்தன.
2023ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யுள்ளார். அவர் தாக்கல் செய்யும் 5வது பட்ஜெட் மற்றும் இந்த அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும்.
2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வரும் என்பதால், அப்போது இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும்
பட்ஜெட் வருவதால், கடந்த சில வாரங்களாக பட்ஜெட் தயாரிப்பு பணிகளுக்காக பல்வேறு தரப்பினரையும் அவைத்து நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துக்களைக் கேட்டறிந்து, ஆலோசனைகள்பெற்றார்.