தங்கம் விலை கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்நதுள்ளது. மீண்டும் சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது.
தங்கம் விலை கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து 3வது நாளாக இன்றும் உயர்நதுள்ளது. மீண்டும் சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,076ஆகவும், சவரன், ரூ.40,608ஆகவும் இருந்தது.
போக்குகாட்டும் தங்கம் விலை! கணிக்க முடியாமல் மிடில்கிளாஸ் மக்கள் குழப்பம்! நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(திங்கள்கிழமை) கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூ.5,086ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 688ஆக உயர்ந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,076க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது ! கிராமுக்கு ரூ.58 வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன
தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக உயர்நது வருகிறது. கடந்த வாரத்தில் தங்கம் விலையில் கடும் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்கியபோதிலும், படிப்படியாகக் குறைந்தது. இந்நிலையில் தொடர்ந்து 3வது நளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் கிராமுக்கு20 ரூபாய் உயர்ந்துள்ளது, சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையில் இன்று மாற்றவில்லை. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.00ஆகவும். வெள்ளி கிலோ ரூ.74,000 ஆகவும் மாற்றமில்லாமல் இருக்கிறது