Share Market Today: உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு: உலோகம், psu பங்கு லாபம்

By Pothy RajFirst Published Dec 26, 2022, 9:50 AM IST
Highlights

வாரத்தின் முதல்நாளான இன்று தேசியப் பங்குச்சந்தையும், மும்பை பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

வாரத்தின் முதல்நாளான இன்று தேசியப் பங்குச்சந்தையும், மும்பை பங்குச்சந்தையும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

கடந்த வாரத்தில் பெரும்பகுதியான நாட்கள் சரிவுடனே வர்த்தகம் முடிந்தது. கடந்த 20 நாட்களில் முதலீட்டாளர்கள் ரூ.16 லட்சம் கோடியை இழந்தனர். வெள்ளிக்கிழமை மட்டும் ரூ.5.50 லட்சம் கோடி முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. இதனால் பங்குச்சந்தையில் பெரும் சோகம் நிலவியது

வீழ்ச்சியில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 450 புள்ளிகள் சரிவு, நிப்டி 18,000க்கு கீழ் சென்றது

வெள்ளிக்கிழமை அமெரிக்கப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது இதன் எதிரொலி ஆசிய மற்றும் இந்தியப் பங்குச்சந்தையில் நிலவுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட பங்குச்சந்தைகளுக்கு இன்று விடுமுறையாகும். 

இருப்பினும் இந்தியச் சந்தையில் கடந்த வாரத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.700 கோடிக்கு பங்குகளை விற்றாலும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக பங்குகளை வாங்கியது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது. இதனால்தான் இன்று காலை முதல் முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால், இன்று காலை பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 485 புள்ளிகள் உயர்ந்து,60,330 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 140 புள்ளிகள் அதிகரித்து 17,946 புள்ளிகளி்ல வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

ரூ.16 லட்சம் கோடி அம்போ! பாதளத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 980 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களில், 23 நிறுவனப் பங்குகள் இழப்பிலும், 7 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் உள்ளன. குறிப்பாக ஹெச்டிஎப்சிவங்கி, ஹெசிஎல் டெக், பவர்கிரிட்,ஹெச்டிஎப்சி, டிசிஎஸ், கோடக்வங்கி, சன்பார்மா ஆகிய நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன.

நிப்டியில் எப்எம்சிஜி பங்குகள் மட்டும் சரிந்துள்ளன. உலோகம், பொதுத்துறை வங்கிப் பங்குகள் ஒரு சதவீதத்துக்கும் அதிகமாக லாபமீட்டி வருகின்றன, தகவல்தொழில்நுட்பம், மருந்துத்துறை, வங்கித்துறை, ஆட்டோமொபைல், ஊடகம் ஆகியதுறைப் பங்ககுளும் ஏற்றத்தில் நகர்கின்றன

click me!