Pan Card Aadhar Card Link: பான் எண்-ஆதார் கார்டை இணைத்துவிடுங்கள்: வருமான வரித்துறை புதிய எச்சரிக்கை

Published : Dec 24, 2022, 04:04 PM IST
Pan Card Aadhar Card Link: பான் எண்-ஆதார் கார்டை இணைத்துவிடுங்கள்: வருமான வரித்துறை புதிய எச்சரிக்கை

சுருக்கம்

பான் எண்ணை , ஆதார் எண்ணுடன் 2023, மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காதவர்களின் பான் எண் செயலிழக்கச் செய்யப்படும் என்று வருமானவரித்துறை புதிதாக இன்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

பான் எண்ணை , ஆதார் எண்ணுடன் 2023, மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்காதவர்களின் பான் எண் செயலிழக்கச் செய்யப்படும் என்று வருமானவரித்துறை புதிதாக இன்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

வருமானவரித்துறை வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வருமானவரிச் சட்டம் 1961ன்படி, பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும், விலக்கு அளிக்கப்பட்ட பிரிவைத் தவிர மற்றவர்கள் அனைவரும் 2023, மார்ச் 31ம்தேதிக்குள், ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்காதவர்களின் பான் கார்டு 2023, ஏப்ரல் 1ம் தேதி முதல் செயலிழந்துவிடும். 

5 லட்சம் கோடி டாலர் குறுகிய ஆசை!இந்தியா வளர்ந்த நாடாக மாற 20 ஆண்டுகள் தேவை:RBIமுன்னாள் கவர்னர்

அசாம், ஜம்மு காஷ்மீர், மேகாலயா ஆகிய மாநிலங்களில் வசிக்கும், இந்தியர்கள் அல்லாதவர்கள், 80வயதுக்கு மேற்பட்டவர்கள், இந்தியக் குடிமகன் அல்லாதவர்கள் இதில் விலக்கு பெற்றவர்கள். என்னவெல்லாம் கட்டாயமோ அது அத்தியாவசியம். தாமதம் செய்யாதீர்கள், இன்றே இணையுங்கள் எனத் தெரிவித்துள்ளது.

பான் கார்டு ஒருமுறை செயலிழந்துவிட்டால், அந்தத் தனிநபர் வருமானவரிச்சட்டத்தின் அனைத்து விளைவுகளையும் பொறுப்பேற்க வேண்டும், பல்வேறை தாக்கங்களை எதிர்கொள்ள நேரிடும். 

பான் கார்டு செயலிழந்துவிட்டால், அந்த நபர் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய முடியாது, இருப்பில் இருக்கும் ரிட்டன்களும் பரிசீலிக்கப்படாது, ரீபண்ட் ஏதும் இருந்தால், அந்த பான் எண்ணுக்கு அனுப்பப்படாது. பான் கார்டு செயலிழந்தவுடன், வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள ஐடி ரிட்டன் நடைமுறைகளை முடிக்க முடியாது, அதிக விகிதத்தில் வரி கழிக்கப்படும் .

மனிதர்கள் சாப்பிட உதவாத அரிசிக்கு 5 % ஜிஎஸ்டி வரி: ஏஏஆர் விளக்கம்

இது தவிர வருமானவரி செலுத்துவோ வங்கியில் புதிதாக கணக்கு தொடங்க முடியாது, மற்ற எந்த நிதிநிறுவனங்களில் உள்ள கணக்குகளையும் இயக்க முடியாது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்-பான் கார்டை இணைப்பது எப்படி?
1.    ஆதார் பான இணைப்புக்கு முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும்

2. அந்த இணையதளத்தில் Link Aadhaar என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

3. இணையதளப் பக்கத்தில் பான் எண், ஆதார் எண், பெயர் (ஆதாரில் உள்ளபடி) பதிவு செய்ய வேண்டும்.

4. ஆதாரில் பிறந்த தேதி முழுமையாக இல்லாமல் பிறந்த ஆண்டு மட்டும்தான் இருக்கிறது என்றால், அதற்குரிய விவரத்தில் டிக் செய்ய வேண்டும்.

5. விவரங்களை சோதித்து ஆதாரை இணைப்பதற்கு ஒப்புதல் வழங்கும் பாக்ஸில் டிக் செய்ய வேண்டும்

6. இணையத்தில் வரும் குறியீட்டு எழுத்துக்களை டைப் செய்து கிளிக் செய்தால் இணைக்கப்பட்ட விவரம் தெரியவரும்


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?