மனிதர்கள் சாப்பிடத் தகுதியற்ற, அதேசமயம் பிறபயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படும் அரிசிக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு கிடையாது, அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் வரும் என்று சத்தீஸ்கரின் அத்தாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங்(ஏஏஆர்) தெரிவித்துள்ளது
மனிதர்கள் சாப்பிடத் தகுதியற்ற, அதேசமயம் பிறபயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படும் அரிசிக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு கிடையாது, அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் வரும் என்று சத்தீஸ்கரின் அத்தாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங்(ஏஏஆர்) தெரிவித்துள்ளது
தீர்பாயத் தலைவர்கள் சோனல் கே. மிஸ்ரா, அபினவ் அகர்வால் தலைமையிலான இரு நபர் அமர்வு மனிதர்கள் சாப்பிட உதவாத அரிசி வேறு பயன்பாட்டுக்கு பயன்படும்போது அதற்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
சீனா உள்பட 4 நாடு பயணிகளுக்கு RTPCR கொரோனா பரிசோதனை கட்டாயம்: மத்திய அரசு அதிரடி
ஷரதா டிரேடர்ஸ் என்ற நிறுவனம் அரிசி அரவை மில் வைத்துள்ளனர். இந்த அரவை மில்லில் மனிதர்கள் சாப்பிட தகுதியற்ற நெல்,அரிசி ஆகியவற்றை வேறு நிறுவனங்களின் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கும், கால்நடை தீவணங்கள் தயாரிக்கவும், புண்ணாக்கு தயாரி்க்கவும் அனுப்பப்படும்போது ஜிஎஸ்டி வரி விதிப்பது சரியாகுமா எனத் தெரிவித்திருந்தார்.
சத்தீஸ்கர் அரசு கூட்டுறவு சந்தை நிலையம் சமீபத்தில் விடுத்த டெண்டரில் கழிவு நெல், மனிதர்கள் சாப்பிட முடியாத அரிசி ஆகியவற்றை ஏலத்தில் எடுத்து, அதை 25 கிலோவுக்கும் அதிகமான மூடையாக பேக்கிங் செய்தேன். ஆனால், 25 கிலோவுக்கு அதிகமாக பேக்கிங் செய்யப்பட்ட மூடைக்கும் ஜிஎஸ்டி வரிவிதிக்கப்படுமா என்பதற்கு விளக்கம் தேவை எனக் கோரியிருந்தார்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான திருத்தப்பட்ட OROP ஓய்வூதியத் திட்டத்தில் எவ்வளவு கிடைக்கும்?
இதற்கு ஏஏஆர் அளித்த விளக்கத்தில் “ மனிதர்கள் சாப்பிட உதவாத, வேறு பயன்பாட்டுக்கு கொண்டு செல்லப்படும் அரிசி, நெல் ஆகியவற்றுக்கு முழுமையாக வரிவிலக்கு இல்லை. ஹெச்எஸ்என் எண் அடிப்படையில் பிரிக்கப்படும்போது, வேளாண் பொருட்களுக்கு 5சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்”எனத் தெரிவித்தனர்.