Ndtv Prannoy Roy: NDTV-யிலிருந்து வெளியேறினார் பிரணாய் ராய்,ராதிகா ராய்: பங்குகள் அதானி குழுமத்துக்கு மாற்றம்

Published : Dec 24, 2022, 10:09 AM IST
Ndtv Prannoy Roy: NDTV-யிலிருந்து வெளியேறினார் பிரணாய் ராய்,ராதிகா ராய்:  பங்குகள் அதானி குழுமத்துக்கு மாற்றம்

சுருக்கம்

என்டிடிவி சேனலை (NDTV) நிறுவியர்களான பிரணாய் ராய், அவரின் மனைவி ராதிகா ராய் இருவரும் பெரும்பாலான பங்குகளை அதானி குழுமத்துக்கு மாற்றிவிட்டு, சேனலில் இருந்து வெளியேறினர்.

என்டிடிவி சேனலை (NDTV) நிறுவியர்களான பிரணாய் ராய், அவரின் மனைவி ராதிகா ராய் இருவரும் பெரும்பாலான பங்குகளை அதானி குழுமத்துக்கு மாற்றிவிட்டு, சேனலில் இருந்து வெளியேறினர்.

பிரணாய் ராய், ராதிகா ராய் தங்கள் வசம் இருக்கும் 32.26 சதவீதப் பங்குகளில் 27.26 சதவீதப் பங்குகளை அதானி குழுமத்துக்கு மாற்றிவிட்டு, வெறும் 5 சதவீதப் பங்குகளுடன் இருவரும் இருக்க உள்ளனர்.
அதானி குழுமத்திடம் தற்போது என்டிடிவி சேனலின் 37.44 சதவீத பங்குகள் கைவசம் உள்ளன. இந்த பங்கு மாற்றத்துக்குப்பின் அது 64.71 சதவீதமாக உயரும். 

என்டிடிவி உரிமையாளர் பிரனாய் ராய்(15.94%) அவரின் மனைவி ராதிகா(16.32%) ஆகியோர் சார்பில் நடத்தப்படும் ஆர்ஆர்பிஆர் நிறுவனத்தின் 29.18 சதவீதப் பங்குகள் உள்ளன. மீதமுள்ள 61.45 சதவீதப் பங்குகள் பிறநிறுவனங்கள், முதலீட்டாளர்கள் வசம் உள்ளன.

பிஎப் சந்தாரார்கள் இந்த வழியில் மட்டும் பணத்தை டெபாசிட் செய்யாதிங்க! இபிஎப்ஓ எச்சரிக்கை

ஆர்ஆர்பிஆர் நிறுவனம் கடந்த 2009 -ம் ஆண்டு தனது கைவசமுள்ள 29.18 சதவீத என்டிடிவி பங்குகளை விஷ்வபிரதான் கமர்சியல் லிமிடெட் (VCPL) நிறுவனத்திடம் அடமானம் வைத்து 403 கோடி ரூபாய் கடன் பெற்று இருந்தது. 

அதானி குழுமத்தின் சார்பில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தால் மறைமுகமாக நடத்தப்படுவதுதான் இந்த விஷ்வபிரதான் கர்ஷியல் லிமிடட் நிறுவனம்.

விபிசிஎல் நிறுவனத்திடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்தும் காலம் 10 ஆண்டுகளாக என்டிடிவிக்கு நிர்ணயக்கப்பட்டு அதற்குரிய காலமும் முடிந்துவிட்டது. கடனை ஆர்ஆர்பிஆர் ஹோல்டிங் நிறுவனம் திரும்ப செலுத்தாத காரணத்தினால் தற்போது விசிபிஎல் நிறுவனம் அந்தப் பங்குகளை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்தது. 

Bank Holiday January 2023:2023, ஜனவரி மாதத்தில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை: முழுவிவரம் இதோ

இந்நிலையில் அதானி குழுமம், என்டிடிவியின் கூடுதலாக 26 சதவீதப் பங்குகளை வெளிச்சந்தையில் வாங்கிவிட்டது. இதையடுத்து அதானி குழுமத்திடம் 37 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகள் கைவசம் வந்துவிட்டன. இப்போது பிரணாய் ராய், ராதிகா ராயும் தங்கள் பங்குகளை அதானி குழுமத்திடம் விற்க உள்ளனர்.

கடன் மோசடி வழக்கு.. சந்தா கோச்சார், கணவர் தீபக் கோச்சாரை தட்டித்தூக்கிய சிபிஐ..!

பங்குச்சந்தையில் என்டிடிவி நிறுவனர்கள் அளித்த அறிக்கையில் “ ஏஎம்ஜி குழுமத்திடம் செய்த பரஸ்பர உடன்பாட்டையடுத்து, எங்களிடம் இருக்கும் பெரும்பாலான பங்குகளை ஏஎம்ஜி நிறுவனத்திடம் விற்கிறோம். 1988ம் ஆண்டு என்டிடிவி சேனலை ஜர்னலிசம் மீதான நம்பிக்கையால் தொடங்கி உலகத் தரத்தில் வளர்த்தோம். 34 ஆண்டுகளில் என்டிடிவி நிறுவனமாக பல நம்பிக்கைகளை அளித்துள்ளது. எங்களுக்கு உலகளவில் பெருமையாக இருக்கிறது, வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம், ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?