கடன் மோசடி வழக்கு.. சந்தா கோச்சார், கணவர் தீபக் கோச்சாரை தட்டித்தூக்கிய சிபிஐ..!

By vinoth kumarFirst Published Dec 24, 2022, 6:44 AM IST
Highlights

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் சாந்தா கோச்சார் செயல்பட்டு வந்தார். அவருடைய பதவிக் காலத்தில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வீடியோகான் குழுமத்துக்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கினார். 

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓவும், நிர்வாக இயக்குநருமான சந்தா கோச்சார் மற்றும் கணவர் தீபக் கோச்சார் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. 

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் சாந்தா கோச்சார் செயல்பட்டு வந்தார். அவருடைய பதவிக் காலத்தில் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வீடியோகான் குழுமத்துக்கு 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கினார். அந்த கடன் தொகை சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் நடத்தி வந்த  நிறுவனத்திற்கு பல்வேறு தவணைகளாக மாற்றப்பட்டது. மேலும், வீடியோகான் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடன் திரும்பி வராத கடனாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க;- G20 Summit 2023: ஜி20 உச்சி மாநாடு: டெல்லியிலிருந்து 1,000 பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்

இதுதொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு மே மாதத்தில் விசாரணை தொடங்கப்பட்டது. விசாரணையில் குற்றம் உறுதியானதை அடுத்து 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் சந்தா கோச்சார் பணிநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் 2020ம் ஆண்டு சந்தா கோச்சார், அவர் கணவர் தீபக் கோச்சாருக்கு சொந்தமான ரூ.78 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி இருந்தது.

இந்நிலையில்,  ஐசிஐசிஐ முன்னாள் தலைமை செயல் இயக்குனர் சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சாரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு இந்த மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினால் சாந்தா கோச்சார் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க;- இந்திய ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்து... உயிரிழந்த 16 பேருக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்!!

click me!