Gold Today Rate: போக்குகாட்டும் தங்கம் விலை! கணிக்க முடியாமல் மிடில்கிளாஸ் மக்கள் குழப்பம்! நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Dec 24, 2022, 10:25 AM IST
Highlights

தங்கம் விலை நாளொரு வண்ணம் பொழுதொறு மேனியாக கணிக்க முடியாத வகையில் மாறிக்கொண்டே இருக்கிறது. தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நாளொரு வண்ணம் பொழுதொறு மேனியாக கணிக்க முடியாத வகையில் மாறிக்கொண்டே இருக்கிறது. தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாயும், சவரனுக்கு 80 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.5,066ஆகவும், சவரன், ரூ.40,528ஆகவும் இருந்தது.

தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது ! கிராமுக்கு ரூ.58 வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ரூ.5,076ஆகவும், சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து ரூ.40 ஆயிரத்து 608ஆக உயர்ந்துள்ளது.கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.5,076க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடும் ஏற்றத் தாழ்வுடன் நகர்ந்தது. இந்த வாரத் தொடக்கத்தில் தங்கம் விலை கிராம் ரூ.5,070 ஆகத் தொடங்கி, அதிகபட்சமாக ரூ.5,124 வரை உயர்ந்தது, ஆனால் நேற்று சரிந்தநிலையில் இன்று மீண்டும் உயர்ந்து ரூ.5,076 என்ற நிலையில் உள்ளது.

தங்கம் விலை தொடர் உயர்வு! சவரன் ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது: இன்றைய நிலவரம் என்ன

இந்த வாரத்தில் கிராமுக்கு ரூ.6 மட்டுமே மாற்ற மடைந்துள்ளது.  இருப்பினும் தங்கம் விலை ரூ.40ஆயிரத்துக்கு குறையாமல் நீடிப்பதால், நகைப் பிரியர்களையும், நடுத்தரக் குடும்பத்தினரையும் கலக்கத்தில் வைத்துள்ளது.

வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று ரூ.74.70ஆக இருந்தநிலையில் இன்று 30 பைசா உயர்ந்து ரூ.74.00 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி  கிலோவுக்கு ரூ.300அதிகரித்து,  ரூ.74,000 ஆக உயர்ந்துள்ளது.

 

click me!