ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கு தொடர்பாக வீடியோகான் நிறுவனத்தின் நிறுவனர் வேணுகோபால் தூத்தை சிபிஐ இன்று கைது செய்தது.
ஐசிஐசிஐ வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கு தொடர்பாக வீடியோகான் நிறுவனத்தின் நிறுவனர் வேணுகோபால் தூத்தை சிபிஐ இன்று கைது செய்தது.
இந்த வழக்கில் ஏற்கெனவே ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ மற்றும் தலைமை இயக்குநர் சந்தா கோச்சார், அவரின் கணவர் தீபக் கோச்சாரை சிபிஐ கைது செய்து காவலில் வைத்துள்ளது. இப்போது இந்த வழக்கிய முக்கியத் துருப்பான வேணுகோபால் தூத்தையும் சிபிஐ கைது செய்தது.
கடந்த 2008ம் ஆண்டு சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனத்தின் நிறுவனர் வேணுகோபால் தூத், சந்தா கோச்சாரின் உறவினர்கள் இருவர் ஆகியோர் சேர்ந்து ஒருநிறுவனத்தை உருவாக்கினர். இந்த நிறுவனத்துக்கு, எந்தவிதமான பிணையும் இல்லாமல் ரூ.3,250 கோடியை சந்தா கோச்சார் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கடன் வழங்கினார்.
கடன் மோசடி வழக்கு.. சந்தா கோச்சார், கணவர் தீபக் கோச்சாரை தட்டித்தூக்கிய சிபிஐ..!
இது ரிசர்வ் வங்கி விதிமுறைகள், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், வங்கி கடன் கொள்கை அனைத்தையும் மீறி இந்த கடனை சந்தா கோச்சார், தனது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கினார்.
பின்னர் இந்தக் கடன் வாராக்கடன் கணக்கில் சேர்க்கப்பட்டது. இந்தக் கடன் தொடர்பாக புகார் எழுந்ததையடுத்து, சிபிஐ வசம் கடந்த 2018ம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சந்தா கோச்சாரை ஐசிஐசிஐ வங்கித் தலைவர் பணியிலிருந்து நிர்வாகம் நீக்கியது.
NDTV-யிலிருந்து வெளியேறினார் பிரணாய் ராய்,ராதிகா ராய்: பங்குகள் அதானி குழுமத்துக்கு மாற்றம்
இந்த வங்கி கடன் மோசடி வழக்கில் சந்தா கோச்சார், அவரின் கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதுமட்டுமல்லாமல் தீபக் கோச்சார் நடத்திய நுபவர் ரினுவபில்ஸ் லிமிட்நிறுவனம், சுப்ரீம் எனர்ஜி, வீடியோகான் இன்டர்நேஷனல் நிறுவனம், வீடியோகான் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவை மீதும் ஐபிசி சதித்திட்டம், ஊழல் தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவானது.
இந்த கடன் மோடி வழக்குத் தொடர்பாக, கடந்த வாரம் சந்தா கோச்சார், அவரின் கணவர் தீபக் கோச்சாரை சிபிஐ அதிரடியாகக் கைது செய்தது. இருவரையும் இன்றுவரை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் வீடியோகான் நிறுவனத்தின் நிறுவனர் வேணுகோபால் தூத்தையும் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடியாகக் கைது செய்தனர்.