Share Market Today: பங்குச்சந்தையில் மகிழ்ச்சி! ரூ.5.50 லட்சம் கோடி சேர்ந்தது:சென்செக்ஸ் 721 புள்ளிகள் உயர்வு

By Pothy RajFirst Published Dec 26, 2022, 3:45 PM IST
Highlights

கடந்த வாரத்தில் தொடர்ந்து 3 நாட்களாக சரிவில் இருந்த மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் முடிந்தன. சென்செக்ஸ் 721 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது.

கடந்த வாரத்தில் தொடர்ந்து 3 நாட்களாக சரிவில் இருந்த மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் முடிந்தன. சென்செக்ஸ் 721 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது.

முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமையன்று ரூ.5.50 லட்சம் கோடியை இழந்தநிலையில் இன்று ஒரேநாளில் முதலீட்டாளர்களின் சொத்துமதிப்பு ரூ.5.50 லட்சம் கோடி உயர்ந்தது. ஒட்டுமொத்த பங்குச்சந்தையின் மதிப்பு ரூ.277.50 லட்சம் கோடியாக அதிகரித்தது.

பங்குச்சந்தையில் இன்றைய உயர்வுக்கு 4 முக்கியக் காரணங்கள் உள்ளன.

1.கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்தநாள் பண்டிகை கொண்டாட மனநிலையில் முதலீட்டாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதால் பெரும்பாலும் லாபம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.கடந்த 21 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் சந்தையில் இழப்பு ஏற்பட்டது. மற்ற 18 முறையும் நிப்டியும், பிஎஸ்இயும் லாபமடைந்துள்ளன.

2. அமெரி்க்கப் பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை உயர்வுடன் முடிந்தன. கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அமெரிக்கப் பங்குச்சந்தை உயர்வால்  டோக்கியோ, சியோல், கோஸ்பி, ஷாங்காய் சந்தைகளும் உயர்வுடன் முடிந்தன, இந்த எதிரொலி இந்தியச் சந்தையிலும் இருந்தது.

3. அந்நிய முதலீட்டாளர்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.706 கோடிக்கு பங்குகளை விற்றிருந்தனர். ஆனால், உள்னாட்டு முதலீட்டாளர்கள் ரூ.3,399 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்ததால், முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்தனர்.

4.தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 18ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது முதலீட்டாளர்களுக்கு மனரீதியாக ஊக்கம் ஏற்பட்டதால், சந்தையில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்பட்டது.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 721 புள்ளிகள் அதிகரித்து, 60,566 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 207 புள்ளிகள் உயர்ந்து, 18,014 புள்ளிகளில் நிலைபெற்றது. கடந்த வாரத்தில் நிப்டி 18ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்ற நிலையில் இன்றைய வர்த்தகத்தில் மீண்டும் உயர்ந்தது.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், 24 நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன, 6 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிந்தன. சன்பார்மா, ஹெச்யுஎல், ஹெச்சிஎல்டெக், பார்திஏர்டெல், கோடக்மகிந்திரா, நெஸ்ட்லேஇந்தியா பங்குகள் சரிந்தன

நிப்டியில் எஸ்பிஐ, இன்ட்ஸ்இன்ட் வங்கி, ஹின்டால்கோ இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், கோல் இந்தியா பங்குகள் லாபமடைந்தன. டிவிஸ் லேப்ஸ், சிப்லா, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா நுகர்வோர் பொருட்கள் பிரிவு சரிவைச்சந்தித்தன.

நிப்டியில் மருந்துத்துறை பங்குகள் மட்டுமே வீழ்ந்திருந்தது. மற்ற அனைத்து துறைப் பங்குகளும் லாபமீட்டின. பொதுத்துறை வங்கிகள் 7% லாபமீட்டின

click me!