Share Market Today: பங்குச்சந்தையில் ஊசலாட்டம்: சென்செக்ஸ் வீழ்ச்சி! நிப்டி 18,000-க்கு கீழ் சரிவு

By Pothy RajFirst Published Dec 27, 2022, 9:52 AM IST
Highlights

மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை முதலே கடும் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. இதனால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் கடும் ஊசலாட்டம் காலையே தொடங்கிவிட்டது

மும்பை மற்றும் இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று காலை முதலே கடும் ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. இதனால் பங்குச்சந்தை வர்த்தகத்தில் கடும் ஊசலாட்டம் காலையே தொடங்கிவிட்டது

அமெரிக்கப் பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிந்தது, ஆசியப் பங்குச்சந்தைகளில் சாதகமான போக்கு போன்றவற்றால் இந்திய முதலீட்டாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். இதனால் நேற்று வர்த்தகம் ஏற்றத்துடன் முடிந்தது, முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.5.50 லட்சம் கோடி உயர்ந்தது.

இதே சாதகமான போக்கு இன்றும் சந்தையில் நிலவி வருகிறது. காலை வர்த்தகம் தொடங்கும் முன்பே மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் உயர்வுடன் காணப்பட்டது. காலை வர்த்தகம் தொடங்கியதும், உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கி 300 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் சரிந்தது.

புத்தாண்டு வரும் வரை சந்தையில் இதுபோன்று ஊசலாட்டம் நிலவக்கூடும். புத்தாண்டுக்குப்பின் நிறுவனங்களின் 3ம் காலாண்டு முடிவுகள், பட்ஜெட் தாக்கல் ஆகியவற்றால் மீண்டும் வர்த்தகம் வேகெடுக்கும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர். குறிப்பாக தகவல்தொழில்நுட்ப பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் 3-ம் காலாண்டு முடிவுகளை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளனர். 

அதானி எபெக்ட்!2022ம் ஆண்டில் உலகளவில் சிறப்பாக செயல்பட்ட பங்குச் சந்தைகளில் இந்தியா முதலிடம்

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 127 புள்ளிகள் சரிந்து, 60,439 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 39 புள்ளிகள் குறைந்து, 17,974 புள்ளியில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.

பங்குச்சந்தையில் மகிழ்ச்சி! ரூ.5.50 லட்சம் கோடி சேர்ந்தது:சென்செக்ஸ் 721 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில், சன்பார்மா பங்குகளைத் தவிர மற்ற பங்குகள் லாபத்தில் உள்ளன. 

நிப்டியில், வங்கி, மருந்துத்துறை பங்குகள் சரிவில் உள்ளன. பொதுத்துறை வங்கிப் பங்குகள், ஆட்டோமொபைல், உலோகம், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் லாபத்தில் உள்ளன.

click me!