Share Market Today: ரூ.3 லட்சம் கோடி காலி! பள்ளத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டிக்கு பெரும்அடி

By Pothy RajFirst Published Jan 10, 2023, 4:04 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று பெரும் பள்ளத்தில் சரிந்தது. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 18ஆயிரத்துக்கு கீழும் சரிந்தன.

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை நேற்று ஏற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று பெரும் பள்ளத்தில் சரிந்தது. சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 18ஆயிரத்துக்கு கீழும் சரிந்தன.

புத்தாண்டு தொடங்கிய முதல் வாரத்திலேயே முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.4 லட்சம் கோடி சரிந்தது. ஆனால், நேற்றைய பங்குச்சந்தையில் ஏற்பட்ட உயர்வால் ரூ.3 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் சொத்து மதிப்பு உயர்ந்தது. இன்று ஏற்பட்ட சரிவால் நேற்றைய லாபம் அனைத்தும் வாரிச் சுருட்டிச் சென்றது.

டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு உயர்ந்தபோதிலும், சீனாவின் பொருளாதாரக் கதவுகள் திறக்கப்பட்டநிலையிலும், கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் அந்தக் காரணிகளை முதலீட்டாளர்கள் புறக்கணித்துவிட்டனர்.

இன்றைய பங்குசந்தையில் சரிவுக்கு 5 முக்கியக் காரணிகள் உள்ளன.

1.    அந்நிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீட்டைத் திரும்பப்பெறுவது அதிகரித்தது. இந்த மாதத்தில் இதுவரை ரூ.8,548 கோடி அந்நிய முதலீடு வெளியேறியது உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு தயக்கத்தைஏற்படுத்தியது.

2.    அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டிவீதம் உயர்த்துவது குறித்து இன்று முக்கிய முடிவை எடுக்க இருக்கிறது.

7 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா அடுத்த 7 ஆண்டுகளில் மாறும்: ஆனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை

3.    உலகளவில் சந்தையின் ஏற்ற இறக்கங்கள், சீனாவின் பொருளாதாரக் கதவுகள் திறப்பு ஒருபக்கம், அமெரிக்க வட்டிவீதம் உயருமா என்ற எண்ணம் போன்றவை முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின
4.    பல்வேறு நிறுவனங்கள் 3ம் காலாண்டு முடிவுகளை வெளியிடுவது

5.    அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெல் எந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடப்போகிறார் என்பது முதலீட்டாளர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இந்தக் காரணிகளால் இந்தியப் பங்குச்சந்தையில் இழப்பு காணப்பட்டது.

மாலை வர்த்தகம் முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 631 புள்ளிகள் குறைந்து, 60,115 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 187 புள்ளிகள் சரிந்து, 17,914 புள்ளிகளில் முடிந்தது.

பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் குஷி! சென்செக்ஸ், நிப்டி உயர்வு! ஐடி பங்கு ஜோர்

மும்பை பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனங்களில், 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டும் லாபம் ஈட்டின. மற்ற 21 நிறுவனப் பங்குகள் மதிப்பும் சரிந்தன

 குறிப்பாக, டாடா மோட்டார்ஸ், பவர்கிரிட், லார்சன்அன்ட்டூப்ரோ, பஜாஜ்பின்சர்வ், டாடா ஸ்டீல், இன்டஸ்இன்ட் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, எச்சிஎல்டெக், விப்ரோ ஆகிய பங்குகள் லாபமடைந்தன.

பங்குச்சந்தையில் வீழ்ச்சி: சென்செக்ஸ் 445 புள்ளிகள் சரிவு, 18,000கீழ் நிப்டி: காரணம்?

நிப்டியில், ஆட்டோமொபைல் மற்றும் சுகாதாரத்துறை பங்குகள் மட்டுமே ஓரளவுக்குலாப மடைந்தன. மற்றவகையில் பொதுத்துறை வங்கி 2 சதவீதம், வங்கி, கட்டுமானத்துறை தலா ஒரு சதவீதம் சரிந்தன.

நிப்டியில் அதானி என்டர்பிரைசஸ், பார்தி ஏர்டெல், எய்ச்சர் மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ பங்குகள் சரிந்தன. டாடா மோட்டார்ஸ், ஹின்டால்கோ, அப்பலோ மருத்துவமனை, பவர் கிரிட், டிவிஸ் லேப்ஸ் ஆகிய பங்குகள் லாபமடைந்தன

click me!