Muhurat Trading Diwali 2022: பங்குச் சந்தை முகூர்த்த வர்த்தகம்; சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு!!

Published : Oct 24, 2022, 07:42 PM ISTUpdated : Oct 24, 2022, 10:19 PM IST
Muhurat Trading Diwali 2022: பங்குச் சந்தை முகூர்த்த வர்த்தகம்; சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு!!

சுருக்கம்

சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் வலுவான லாபத்துடன் தீபாவளி முகூர்த்த டிரேடிங்கை நிறைவு செய்தது. 

தீபாவளியான இன்று திங்கட்கிழமை சிறப்பு முகூர்த்த டிரேடிங்கில் முக்கிய பெஞ்ச்மார்க் குறியீடுகள் உற்சாகமான துவக்கத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. 

துவக்கத்தில், சென்செக்ஸ் 650 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 59,960 ஆக இருந்தது. நிஃப்டி 17,700-க்கு மேல் உயர்ந்து, கிட்டத்தட்ட 200 புள்ளிகள் உயர்ந்தது. இறுதியாக 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்து 59,831.66 புள்ளிகளில் முடிந்தது. நிப்டி 154.45 புள்ளிகள் உயர்ந்து 17,730.75 புள்ளிகளில் முடிந்தது. 

சென்செக்ஸ் 30 பங்குகளில், லார்சன் அண்ட் டூப்ரோ 2 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் ஈட்டியது. ஹெச்டிஎஃப்சி, நெஸ்லே இந்தியா, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவற்றின் பங்குகளின் மதிப்பும் உயர்ந்து காணப்பட்டன. அதேசமயம், ஹிந்துஸ்தான் யுனிலீவர் 2.5 சதவீதம் சரிந்தது.

பங்குச் சந்தையில், சென்செக்ஸ் மிட்கேப் குறியீடு 0.6 சதவிகிதம் உயர்ந்தது. ஸ்மால்கேப் குறியீடு ஒரு சதவிகிதம் உயர்ந்தது. துறை ரீதியாக, பிஎஸ்இ வங்கி, மூலதனப் பொருட்கள், பவர் மற்றும் ஆட்டோ குறியீடுகள் ஒரு சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து காணப்பட்டன. 

TMB Bank:தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு பச்சைக் கொடி! தடையை நீக்கியது ரிசர்வ் வங்கி

சம்வத் 2078:  சம்வத் 2071க்குப் பிறகு முதல் முறையாக சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஓரளவு சரிவைச் சந்தித்தன. இருப்பினும், இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, உள்நாட்டுச் சந்தைகளின் பின்னடைவு மற்றும் உலகளாவிய சகாக்களுக்கு அவற்றின் கூர்மையான முன்னேற்றம். மேலும் படிக்கவும்

தீபாவளியான இன்று சென்செக்ஸ் மற்றும் நிப்டி பங்கு வர்த்தகம் மாலை 6.15 முதல் 7.15 மணி நேரம் வரை நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளில் முகூர்த்த நேரத்தில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது லட்சுமிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது வழக்கம். இந்த நடைமுறை கடந்த 1957 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது. 1992 ஆம் ஆண்டு முதல் நிப்டி எனப்படும் தேசிய பங்குச் சந்தை முகூர்த்த பங்கு வர்த்தகத்தை நடத்துகிறது.

கார்கிலில் பிரதமர் மோடியிடம் தமிழ் பாடலை பாடி அசத்திய தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள்..! வைரல் வீடியோ

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Investment: முதியோர் பணத்தை ஏப்பம் விடும் குட்டி குட்டி தவறுகள்.! 7 விஷயங்களை தவிர்த்தால் சேமிப்பு கரையாது.!
Business: வருங்காலத்துல இந்தியாவில் பவர்கட்டே இருக்காதாம்.! ஏன் தெரியுமா.?