Dhanteras 2022: தந்தேராஸ் பண்டிகையில் ரூ.40ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும்: சிஏஐடி எதிர்பார்ப்பு

By Pothy Raj  |  First Published Oct 22, 2022, 5:46 PM IST

தந்தேராஸ் கொண்டாடப்படும் இருநாட்களில் ரூ.40ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வாடிக்கையாளர்கள் சாதகமான மனநிலையில் உள்ளனர் என்று அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு(சிஏஐடி) நம்பிக்கை தெரிவித்துள்ளது.


தந்தேராஸ் கொண்டாடப்படும் இருநாட்களில் ரூ.40ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். வாடிக்கையாளர்கள் சாதகமான மனநிலையில் உள்ளனர் என்று அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு(சிஏஐடி) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தந்தேரஸ் திருநாளில் துடைப்பம் ஏன் வாங்குகிறோம்? அப்படி! வாங்கும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்

Tap to resize

Latest Videos

தீபாவளியின் முதல்நாள் தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் புதிய பொருட்களான ஆடைகள், தங்கம்,வெள்ளிநகைகள், பொருட்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், சமையலுக்கு தேவையான பொருட்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை வாங்குவது சிறந்தது என மக்கள் நம்புகிறார்கள்.

இந்த ஆண்டு தந்தேராஸ் இந்தவாரம் முழுவதும் இருக்கிறது. அதாவது இன்று பிற்பகல் 2மணிக்கு தொடங்கும் தந்தேராஸ், ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணிவரை இருக்கிறது

தந்தேராஸ் பண்டிகையில் பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது குறித்து அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தேசியத் தலைவர் பிசி.பார்தியா கூறுகையில் “ இந்த ஆண்டு தந்தேராஸ் பண்டிகையின்போது  2 நாட்களில் ரூ.40ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கிறோம். இதில் தங்க நகைகள் விற்பனை மட்டும் ரூ.25 ஆயிரம் கோடிக்கு இருக்கும் என நம்புகிறோம். மக்களின் மனதில் சாதகமான போக்கு தென்படுகிறது” எனத் தெரிவித்தார்

வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை! எந்தெந்த நகரங்களில் எனத் தெரிந்து கொள்ளுங்கள்

அனைத்து இந்திய நகைகள் மற்றும் பொற்கொல்லர் கூட்டமைப்பு தேசியத் தலைவர் பங்கஜ் அரோரா கூறுகையில் “ நாடுமுழுவதும் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் புதிய உற்சாகம், ஆர்வம் காணப்படுகிறது. 

Dhanteras 2022: தந்தேராஸ் பண்டிகை 2022: பேடிஎம் மூலம் கிப்ட் கார்டில் தங்கம் வாங்குவது எப்படி?

தந்தேராஸ் பண்டிகையில் விற்பனை சிறப்பாக இருக்கும் என்பதால், விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். செயற்கை நகைகளுக்கும் நல்ல தேவை வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கிறது. தங்கம், வெள்ளி காசுகள், சிலைகள், நகைகள் அதிக அளவில் விற்பனையாவதை பார்க்கிறோம்”எனத் தெரிவித்தார்
 

click me!