இனி தொழில் தொடங்க ரூ.20 லட்சம் வரை கடன் பெறலாம்.. மத்திய அரசு வெளியிட்ட குட்நியூஸ்..

By Ramya s  |  First Published Jul 24, 2024, 10:53 AM IST

முத்ரா திட்டத்தின் கடனுதவி வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


ஏழை, எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் முன்னேற்றத்தை கருத்தில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த மக்கள் நலத்திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். புதிதாக தொழில் தொடங்க விரும்புவோருக்கு உதவி செய்யும் வகையில் மத்திய அரசு தொடங்கிய திட்டம் தான் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம். கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி பிரதமர் மோடியால் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. நடுத்தரவ வர்க்கம் மற்றும் சாமானிய மக்களையும் தொழில் முனைவோராக மாற்றவும், சிறு குறு வணிகர்களுக்கு நிதியுதவி அளிப்பதும் தான் இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். முத்ரா திட்டத்தின் மொத்தம் 3 வகைகளில் கடனுதவி வழங்கப்படுகிறது.

Latest Videos

undefined

Gold Silver Rates: தங்கம், வெள்ளி விலை ரூ.4,000 சரிவு! நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் செய்த மாயம்!

அதாவது சிஷு என்ற வகையில் ரூ.50,000 வரையில் தொழில் முனைவோர் கடன் பெறலாம். அதே நேரத்தில் கிஷோர் என்ற வகையின் கீழ் ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் கிடைக்கும். தருண் என்ற வகையின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வந்தது. இந்த கடன்களை பெற்ற பிறகு 3 அல்லது 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த வேண்டும். வணிக வங்கிகள், கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மட்டுமின்றி வங்கி சாரா நிதி நிறுவனங்களும் முத்ரா கடன்களை வழங்கி வருகின்றன. 

இந்த நிலையில் முத்ரா திட்டத்தின் கடனுதவி வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் இந்த அசத்தல் அறிவிப்பை வெளியிட்டார்.  தனது பட்ஜெட் உரையில் வேலைவாய்ப்பு, திறன், சிறுகுறு நிறுவனங்கள், பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்திய அவர், பல புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்துக்கு போக வேண்டாம்.. ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான ரூல்ஸ் அதிரடி மாற்றம்!

அதன்படி முத்ரா யோஜனா கடன் வரம்பை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுவதாக அவர் அறிவித்தார். முத்ரா கடனின் தருண் வகையின் கீழ் கடன் பெற்று அதனை வெற்றிகரமாக திருப்பிச் செலுத்திய தொழில் முனைவோருக்கு ரூ.20 லட்சம் கடனுதவி வழங்கப்படும் என்று நிர்மலா சீராதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பு சிறு குறு தொழில் முனைவோர் மட்டுமின்றி புதிதாக தொழில் தொடங்க திட்டமிட்டிருப்போரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

click me!