இந்தியாவில் அனைத்து குடிமகன்களுக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. உங்கள் செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட் ஆதார் எண் அல்லது அட்டையை மறந்துவிட்டாலோ அல்லது தொலைத்து விட்டாலோ அதனை எளிதில் மீட்டெடுக்கலாம். அது எப்படி என இதில் பார்க்கலாம்!
நாட்டில் உள்ள அனைத்து பிரஜைகளுக்கும் தற்போது ஆதார் அட்டை அல்லது ஆதார் எண் என்பது மிகவும் ஒரு முக்கியமான கட்டாய ஆவணமாக பார்க்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகளின் பல்வேறு சேவைகளை பெறுவதற்கும், வங்கிக் கணக்கு திறப்பு, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரயில் டிக்கெட் ரிசர்வேசன் செய்வது முதல் ஒரு வங்கிக்கணக்கு திறப்பது வரை அனைத்திற்கும் ஆதார் எண் அவசியமாகப்பட்டுள்ளது.
ஒரு வேளை உங்களுடைய ஆதார் அட்டை தொலைத்துவிட்டாலோ அல்லது தக்க சமயத்தில் ஆதார் எண்ணை மறந்துவிட்டாலோ அதனை எளிதில் மீட்டெடுக்கலாம்.
Unique Identification Authority of India - UIDAI மூலம் (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) வழங்கப்படும் ஆதார் அட்டையை மீட்டெடுப்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன அவைகளை இதில் காணலாம்.
மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்ட ஆதார்
உங்கள் செல்போன் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை மறந்துவிட்டாலோ அல்லது தொலைத்து விட்டாலோ அதனை மீட்டெடுப்பது மிக சுலகம் அது எப்படி என பார்க்கலாம்.
நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆதார் (UIDAI)-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid
பின்னர் ஆதாரை மீட்டெடுக்க வேண்டும் என்ற உங்களுடைய தேவையை அதில் தேர்வு செய்து கொள்ளவும்.
பின்னர். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கபட்ட உங்களுடைய முழு பெயர், மொபைல் நம்பர், இமெயில் ஐடி ஆகியவற்றை உள்ளிடவும்.
பின்னர் திரையில் தோன்றும் ரகசிய குறியீடு மற்றும் உங்கள் செல்போன் எண்ணிற்கு பெறப்பட்ட OTP ஆகிய இரண்டையும் உள்ளிடவும்.
உள்ளிடப்பட்ட OTP சரிபார்ப்பு செயல்முறை நிறைவு பெற்றதும் உங்கள் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் SMS மூலமாக ஆதார் எண் அனுப்பிவைக்கப்படும்.
இந்த சேவையை நீங்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
undefined
Post office Savings Scheme | அதிக வட்டி விகிதம் தரும் 3 சேமிப்பு திட்டங்கள் இதுதான்!
மொபைல் நம்பருடன் இணைக்கபடாத ஆதார்
ஒருவேளை உங்களுடைய ஆதார் எண்ணுடன் உங்களின் செல்போன் எண் நீங்கள் இணைக்காத பட்சத்தில் பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி ஆதார் எண் அல்லது அட்டைய மீட்டெடுக்கலாம்.
நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆதார் (UIDAI)-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid
பின்னர் ஆதாரை மீட்டெடுக்க வேண்டும் என்ற உங்களுடைய தேவையை அதில் தேர்வு செய்து கொள்ளவும்.
‘Print Aadhaar’ என்ற சேவை மூலமாக ஆதார் மைய உதவியுடன் உங்களுடைய ஆதார் எண்ணை மீட்டெடுக்க முடியும்.
அவ்வாறு மீட்டெடுக்க நீங்கள் பின்வரும் உங்களது சுய விவரங்களுடன் நேரடியாக ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும்
Patta Application | வீட்டு மனைக்கு இனி பட்டா வாங்குவது ரொம்ப ஈஸி! ஒரே நிமிடத்தில் பட்டா பெறுவது எப்படி?
ஆதார் அட்டையில் உள்ளபடியே, பெயர், பாலினம், மாவட்டம் அல்லது மின்னஞ்சல் குறியீடு உள்ளிட்டவற்றை ஒரு தனி பேப்பரில் எழுதிக்கொள்ளுங்கள்.
மேற்படி தகவல்கள் கொடுத்தும் ஒருவேலை உங்களுடைய ஆதார் எண் கண்டுபிடிக்க இயலாமல் போகும் பட்சத்தில், கூடுதலாக உங்களுடைய பிறந்த தேதி, உங்கள் மாநிலம் போன்ற இருப்பிட விவரங்களை வழங்கியும் உங்களுடைய ஆதார் எண்ணை கண்டுபிடிக்கலாம்.
அதன் பிறகு உங்களுது ஒற்றை கை ரேகை அல்லது ஒற்றை கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க வேண்டும். உங்களுக்கா சரியான ஆதார் எண்ணை கண்டுபிடித்த உடன் அதனை பிரிண்ட் செய்து ஆதார் சேவை மைய்ய ஆப்பரேட்டர் உங்களுக்கு இ-ஆதாரை வழங்குவார். ஆதார் சேவை மையத்தை நாடும் போது, ஒவ்வொரு சேவைகளுக்கும் நீங்கள் ரூ.30 கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களைப் பணக்காரராக மாற்றும் பொன் விதிகள்! லாபம் பல மடங்கு பெருக இதை ட்ரை பண்ணுங்க!