Meta India Layoffs 2022: பேஸ்புக் மெட்டாவின் ஆட் குறைப்பு இந்தியாவிலும் பாதிப்பு ! உண்மை விவரங்கள் என்ன?

By Pothy RajFirst Published Nov 10, 2022, 4:50 PM IST
Highlights

பேஸ்புக்கின் தாய்நிறுவனமான மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய நிலையில் இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், எத்தனை ஊழியர்கள் இந்த வேலைப்பறிப்பில் பாதிக்கப்பட்டனர் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

பேஸ்புக்கின் தாய்நிறுவனமான மெட்டா நிறுவனம் 11 ஆயிரம் ஊழியர்களை நீக்கிய நிலையில் இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், எத்தனை ஊழியர்கள் இந்த வேலைப்பறிப்பில் பாதிக்கப்பட்டனர் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை.

உலகளவில் பொருளாதார மந்தநிலை, வட்டிவீதம் அதிகரிப்பு, பணவீக்கம், போட்டியாளர்கள் அதிகரி்ப்பு போன்ற காரணிகளால் வருமானக் குறைவு ஏற்பட்டு உலகளவில் பல நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன.

11ஆயிரம் பேர் நீக்கம்! ஹெச்1பி விசாவில் வந்து வேலையிழந்தவர்களுக்கு உதவுகிறது மெட்டா

சமீபத்தில் உலகையே திரும்பிப்பார்க்க வைத்தது, எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியவுடன் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய 3500 பேரை எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி வேலையிலிருந்து நீக்கினார். இதில் இந்தியாவில் மட்டும் ஏற்ககுறைய 90 சதவீதம் ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த ஊழியர்களுக்கு எதிர்காலப் பலன்கள் குறித்து இதுவரை எந்தவிதமான தகவலும் இல்லை.

இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தைத் தொடர்ந்து பேஸ்புக்கின் மெட்டா நிறுவனமும் ஆட்குறைப்பில் ஈடுபட்டது. மெட்டா சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் அறிவிப்பில் “மெட்டா நிறுவனத்தின் 13 சதவீத ஊழியர்கள் குறைக்கப்படுகிறார்கள், ஏறக்குறைய 11ஆயிரம் ஊழியர்கள் வேலையிழக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

பேஸ்புக் மெட்டா நிறுவனம் ‘மெகா ஆட்குறைப்பை’ இன்று தொடங்குகிறது

ஆனால், ஊழியர்களுக்கு 16 வார ஊதியம், கூடுதலாக 2 வார ஊதியம், ஊழியர்கள் குடும்பத்தினருக்கு 6 மாதங்கள் மருத்துவக் காப்பீடு, அடுத்த வேலை கிடைப்பதற்கான உதவி, ஹெச்1பி விசாவில் வந்துள்ள ஊழியர்களுக்கு தேவையான குடியேற்ற வசதி ஆகியவை செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பேஸ்புக் மெட்டாவின் இந்திய அலுவலகத்தில் ஏறக்குறைய 400 பேர் பணியாற்றி வருகிறார்கள். மெட்டாவின் அறிவிப்பால் இந்தியாவில் உள்ள மெட்டா நிறுவனத்தில் எத்தனை பேருக்கு வேலைபறிபோயுள்ளது என்பது யாருக்கும் தெரியவில்லை. இதுவரை அந்த விவரங்களை மெட்டா நிறுவனமும் வெளியிடவில்லை.

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த 719 பேர் கைது! ரூ.55,575 கோடி கண்டுபிடிப்பு

இது தொடர்பாக செய்தி நிறுவனங்கள்கேட்டபோதும் அதற்கு மெட்டா நிறுவனம் பதில் அளிக்கவில்லை. கடந்த வாரம் மெட்டா நிறுவனத்தின், இந்தியத் தலைவர் அஜித் மோகன் வேலையிலிருந்து ராஜினமா செய்து, அடுத்த வாய்ப்பை தேடினார்.  ஸ்நாப்சாட்டின் இந்தியப் பிரிவு தலைவராக மோகன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!