மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் இன்று கரடியின் ஆதிக்கம் காணப்பட்டது. இதனால் சென்செக்ஸ், நிப்டி மோசமாக வீழ்ந்த நிலையில் வர்த்தகத்தை முடித்தன.
சர்வதேச சூழல் சாதகமாக இல்லாதது, ஆசியச் சந்தை, அமெரிக்கச் சந்தையில் வீழ்ச்சி போன்றவை இந்தியச் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.
11ஆயிரம் பேர் நீக்கம்! ஹெச்1பி விசாவில் வந்து வேலையிழந்தவர்களுக்கு உதவுகிறது மெட்டா
குறிப்பாக அமெரிக்காவில் நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி கை ஓங்கி இருப்பதும், அமெரிக்க பணவீக்க புள்ளிவிவரங்கள் இன்று வெளியாவதாலும் மிகுந்த கவனத்துடன் முதலீட்டாளர்கள் சந்தையில் வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்கப் பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆசியச் சந்தையிலும் இருந்தது. இதன் தாக்கம் காலை முதலே இந்தியச் சந்தையில் இருந்தது. இதனால் வர்த்தகம் தொடங்கும் முன்பே பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியதிலிருந்து முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை எடுப்பதிலேயே கவனமாக இருந்ததால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
உயர்வில் தொடங்கி சரிந்த பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி:காரணம் என்ன?
பிற்பகல் வர்த்தகத்தின்போது ஐரோப்பியச் சந்தையிலும் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது முதலீட்டாளர்களே மேலும் பதற்றப்படுத்தியது. இதனால் பிற்பகலுக்குப்பின் இந்தியச் சந்தையில் சரிவு வேகமாக இருந்தது. மாலை வர்த்தகம் முடிவில்மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 420 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 60,613 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி, 128 புள்ளிகள் சரிந்து, 18,028 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்தது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் பங்குகளில் 7 நிறுவனப் பங்குகளைத்தவிர மற்ற 23 நிறுவனப் பங்குகள் சரிவில் முடிந்தன.
ஹெச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், கோடக் வங்கி, டாக்டர்ரெட்டீஸ், இந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி ஆகிய நிறுவனப் பங்குகள் லாபத்தில் முடிந்தன. மற்ற பங்குகளான, ஹெச்சிஎல் டெக், சன்பார்மா, விப்ரோ, டிசிஎஸ், ரிலையன்ஸ், என்டிசிபிசி, டாடா ஸ்டீல், மாருதி, பவர்கிரிட், டைட்டன், பஜாஜ் பின்சர்வ், மகிந்திரா அன்ட் மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி ஆகிய பங்குகள் மதிப்பு சரிந்தன.
பாதாளத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி!நிப்டியும் சரிவு: என்ன காரணம்?
நிப்டியில் அனைத்துப் துறையும் வீழ்ச்சி அடைந்தன, குறிப்பாக ஆட்டோமொபைல், பொதுத்துறை வங்கி, உலோகத்துறை பங்குகள் 2 சதவீதம் சரிந்தன.
அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குநர் சரத் ரெட்டி சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 6சதவீதம் சரிந்தது.
அதேபோல டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2வது காலாண்டு முடிவுகள் எதிர்பார்ப்பை விட குறைந்து, இழப்பில் முடிந்தது. இதனால் டாடா மோட்டார்ஸ் பங்குகளும் 5 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.