Gold Rate Today : தங்க நகை வாங்குவோர் கவனத்திற்கு.. மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை

By Raghupati RFirst Published Mar 15, 2023, 10:25 AM IST
Highlights

நேற்று 43 ஆயிரத்தை கடந்த தங்கத்தின் விலை, இன்று சற்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை பார்க்கலாம்.

பெண்களுக்கு பிடித்தமானவைகளில் ஒன்று தங்கம். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பலரும் தங்கம் மீது முதலீடு செய்து வருகின்றனர்.

நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.43210-க்கு விற்பனையானது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,390க்கு விற்பனை செய்யப்பட்டது.

Gold Rate Today: மீண்டும் ரூ.43 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்

இன்றைய (மார்ச் 15) நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ 43,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  அதேபோல 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,380 ஆக விற்பனையாகிறது. இது சென்னை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவற்றிற்கும் பொருந்தும்.

ஒரு கிராம் வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.72.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 72,500-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..2022ல் 11,000 பேர்.. 2023ல் 10,000 பேர் - ஊழியர்களை வீட்டுக்கு விரட்டும் மெட்டா நிறுவனம்

click me!