WPI Inflation: பிப்ரவரியில் மொத்த விலை பணவீக்கம் 3.85 சதவீதமாகச் சரிந்தது

By SG BalanFirst Published Mar 14, 2023, 3:11 PM IST
Highlights

சென்ற பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் 3.85 சதவீதமாக சரிவு கண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2023 பிப்ரவரியில் நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் தொடர்ந்து 9வது மாதமாக சரிவு கண்டு 3.85 சதவீதமாகக் குறைந்துள்ளது. எரிபொருள் மற்றும் உற்பத்திப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியின் எதிரொலியாக மொத்த பணவீக்க விகிதமும் குறைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13.43 சதவீதமாக இருந்தது. இதுவே கடந்த மாத ஜனவரியில் 4.73 சதவீதமாக இருந்தது.

ஏடிஎம்மில் இருந்து பணம் மட்டுமா.? இனி பிரியாணியும் கிடைக்கும்.! சென்னையில் சூப்பரான வசதி அறிமுகம்

பிப்ரவரி 2023 இல் பணவீக்க விகிதம் குறைவதற்கு கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உணவு அல்லாத பொருட்கள், உணவுப் பொருட்கள், தாதுக்கள், கணினி, மின்னணு மற்றும் ஆப்டிகல் பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் இரசாயன பொருட்கள், மின்சார உபகரணங்கள் மற்றும் மோட்டார் ஆகியவற்றின் விலைகள் வீழ்ச்சி அடைந்ததுதான் காரணம்" என்று வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பருப்பு வகைகளின் பணவீக்கம் 2.59 சதவீதமாகவும், காய்கறிகளில் பணவீக்கம் (-)21.53 சதவீதமாகவும் உள்ளது. பிப்ரவரி 2023 இல் எண்ணெய் வித்துக்களின் பணவீக்கம் (-)7.38 சதவீதமாக உள்ளது. எரிபொருள் பணவீக்கம் முந்தைய மாதத்தில் இருந்த 15.15 சதவீதத்தில் இருந்து 14.82 சதவீதமாகக் குறைந்துள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் பணவீக்கமும் 2.99 சதவீதத்தில் இருந்து 1.94 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பொருட்கள், சேவைகள் சில்லறை விலையில் நுகர்வோரைச் சென்றடையும் முன்பு, ஒரு மாதத்துக்கும், இன்னொரு மாதத்துக்கும் இடையே ஏற்படும் விலை மாற்றம் மொத்த விலைப் பணவீக்கம் எனப்படுகிறது. அதாவது பொருள்கள் மொத்தமாக விற்கப்படும்போது அவற்றின் விலையில் காணும் வேறுபாடு. விலையில் ஏற்படும் இந்த வேறுபாட்டைக் கொண்டு பணவீக்கம் தீர்மானிக்கப்படும்.

சில்லறை பணவீக்கம் விகிதமும் ஜனவரியில் 6.52 சதவீதமாக இருந்து, பிப்ரவரியில் 6.44 சதவீதமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகவும் மாசுபட்ட 50 நகரங்களில் 39 இந்தியாவில் உள்ளவை: ஆய்வில் தகவல்

click me!