வருமான வரி இ சரிப்பார்ப்பு என்றால் என்ன? 35,000 வழக்குகளுக்கு இதுவரை தீர்வு!!

By Dhanalakshmi GFirst Published Mar 14, 2023, 2:38 PM IST
Highlights

தாங்களாக முன் வந்து வரி செலுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், வரி நிர்வாகத்தில் மூன்றாம் மனிதரின் தலையீட்டை தடுக்கவும் வருமான வரித்துறை டிசம்பர் 13, 2021ல் இ - சரிபார்பு  முறையை அறிமுகம் செய்தது.

இதன் அடிப்படையில், 2019-20 நிதியாண்டில் இருந்து இ சரிபார்ப்பு முறையில் 68,000 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் ஏறத்தாழ 35,000 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இருப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வருமான வரித்துறை பதிவு செய்து இருக்கும் டுவிட்டரில், ''இ சரிபார்ப்பு முறையை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. தாங்களாகவே முன் வந்து புகார்கள் தெரிவிக்க, வெளிப்ப்டைத்தன்மையை உருவாக்க, வருமான வரித்துறையின் தலையீடு இல்லாமல், எவ்வாறு பதிவு செய்வது என்பதை ஊக்குவிக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும், வருமான வரியை குறைத்து செலுத்தி இருப்பவர்கள் மற்றும் செலுத்தாமல் இருப்பவர்கள் பற்றிய தகவல்களை பறிமாறிக் கொள்ளவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏடிஎம்மில் இருந்து பணம் மட்டுமா.? இனி பிரியாணியும் கிடைக்கும்.! சென்னையில் சூப்பரான வசதி அறிமுகம்

மார்ச் 13, 2023 அன்று வெளியாகி இருக்கும் பத்திரிக்கை செய்தியில், ''2019-2020 ஆம் நிதியாண்டில் நிதி தொடர்பான தகவல்கள் இ சரிபாப்பு முறையில் சரிபார்க்க எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுகுறித்த தகவல்கள் முதலில் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இதுவரை 38,000 வழக்குகள் சரி பார்க்கப்பட்டுள்ளன. 

பல்வேறு வழிகளில் நிதி தொடர்பான செயல்பாடுகள் பெறப்படுகின்றன. இந்த தகவல்களில் இருந்து ஒரு சிறிய பகுதி வரி செலுத்துவோரின் 26AS அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த டேட்டா வரி செலுத்துவோருக்கு ஆண்டு தகவல் அறிக்கை மூலம் தெரிவிக்கப்படுகிறது. தவறுகள் இருந்தால் அதை நிராகரித்து விடுமாறு வருமான வரித்துறை சலுகை வழங்குகிறது. எந்த தவறும் இல்லை என்கிற பட்சத்தில் இ சரிபார்ப்புக்கு வரி செலுத்துவோரின் தகவல்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்த பிறகு, ரிட்டர்ன் தாக்கல் செயல்முறையை முடிக்க வருமான வரி கணக்கை சரிபார்க்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இ சரிபார்ப்பு செய்யவில்லை என்றால், வருமான வரி செலுத்தவில்லை என்றே கருதப்படும். உங்கள் வருமான வரியை சரிபார்க்க இ- சரிபார்ப்பு மிகவும் வசதியானது. ஆதார், நெட் பேங்க், டிஜிட்டல் கையொப்பம் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி பயன்படுத்தி ஆன்லைனில் உங்கள் வருமானத்தை இ - சரிபார்ப்பு முறையில் சரிபார்க்கலாம். இ சரிப்பார்ப்பு ரிட்டனில் இருந்து இ சரிபார்ப்பு திட்டம் 2021 முற்றிலும் வேறுபாட்டது.

Gold Rate Today: மீண்டும் ரூ.43 ஆயிரத்தை கடந்தது தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்

click me!