lumpy virus: கையைப் பிசையும் கர்நாடகா! லம்பி வைரஸால் கால்நடைகளுக்கு பாதிப்பு அதிகரிப்பு! வியாபாரமும் காலி

By Pothy Raj  |  First Published Oct 12, 2022, 12:37 PM IST

கர்நாடக மாநிலத்தில் கால்நடைகளுக்கு அதிகரித்துவரும் லம்பி வைரஸ்(எல்எஸ்டி) நோயால் கால்நடைகள் மட்டும் பாதிக்கப்படவில்லை, கால்நடை சார்ந்த வர்த்தகம், பால் விற்பனை, மாட்டிறைச்சி விற்பனை, உயிரியியல் பூங்கா ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


கர்நாடக மாநிலத்தில் கால்நடைகளுக்கு அதிகரித்துவரும் லம்பி வைரஸ்(எல்எஸ்டி) நோயால் கால்நடைகள் மட்டும் பாதிக்கப்படவில்லை, கால்நடை சார்ந்த வர்த்தகம், பால் விற்பனை, மாட்டிறைச்சி விற்பனை, உயிரியியல் பூங்கா ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தீவிரமான கண்காணிப்பு, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்துதலை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்தியுள்ளது கர்நாடக அரசு. பல்வேறு தாலுகவிலும் லம்பி வைரஸ் தொற்று பரவிவிட்டதால் என்ன செய்வதென்ற தெரியாமல் கர்நாடக அரசு கையைப் பிசைகிறது.

Tap to resize

Latest Videos

கால்நடைகளுக்குப் பரவும் லம்பி வைரஸ் நோய் பெரும்பாலும் ஈக்கள், கொசுக்கள், பூச்சிகள் மூலம்தான் பரவுகின்றன. இதுவரை லம்பி வைரஸால் கர்நாடக மாநிலத்தில் 38,726 கால்நடைகள் பாதிக்கப்பட்டதாக மாநில அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 1,723 கால்நடைகள் லம்பி வைரஸால் உயிரிழந்துள்ளன.

தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து இதுவரை. 5.60 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இந்த லம்பி வைரஸ் நோய், 28 மாநிலங்களுக்கும்  பரவிவிட்டதால்தான் எவ்வாறு தடுப்பது என்பது தெரியாமல் கர்நாடக அரசு கையைப் பிசைந்து வருகிறது.

லம்பி வைரஸால் கர்நாடக மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனை, பால் விற்பனை, கால்நடைகள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது: இறுதி அஞ்சலி செலுத்திய தலைவர்கள் விவரம்?

கடந்த ஆகஸ்ட் மாதமே லம்பி வைரஸ் நோய் பரவல் தொடங்கிவிட்டது. அப்போதே தீவிரமான கவனிப்பும், தடுப்பூசியும் செலுத்தியிருந்தால் பாதிப்பை குறைத்திருக்கலாம். இப்போது லம்பி வைரஸ் 10 மாநிலங்களுக்கு பரவியபோதிலும் இதை பெருந்தொற்றாக மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த லம்பி வைரஸில் இருந்து கால்நடைகளைக் காக்கும் பொருட்டும், வராமல் தடுக்கவும் கர்நாடக பால் உற்பத்தியாளர்களும், வனத்துறையும் தீவிரமான விழிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள்.

பாலுக்காகவளர்க்கப்படும் கறவை மாடுகள், ஆடுகள் போன்றவற்றையும், இறைச்சிக்காக வளர்க்கப்படும் கால்நடைகளையும் பாதுகாப்பதில் தீவிரமான கவனம் செலுத்தப்பட்டு வருகிறது

ராகுல் காந்தியுடன் போட்டிபோட்டு தண்டால் பயிற்சி எடுத்த காங்கிரஸ் தலைவர்கள்: வைரல் வீடியோ

முதல்வர் பசவராஜ் பொம்மை சொந்த மாவட்டமான ஹாவேரியில் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து 640 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.அதைத் தொடர்ந்து பெல்லாரியில் 550,  பெலகாவியில் 196, கடாக்கில் 176, கோலாரிலும் குறிப்பிடத்தகுந்த பாதிப்பு இருக்கிறது

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பவன் சவான் கூறுகையில் “ மாநிலத்தில் லம்பி வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது, அனைத்து மாவட்ட  அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். அனைத்து கால்நடை மருத்துவர்களும் விவசாயிகளுடனும், பால்பண்ணை உரிமையாளர்களுடனும் கலந்து பேசி தொடர்பில் இருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு பட்ஜெட் எப்படி இருக்கும்? நிர்மலா சீதாராமன் சூசகம்

கால்நடைகளை அடிக்கடி கண்காணித்தல், நோய் தொற்று இருந்தால் கண்காணித்தல் போன்றவை தீவிரமாக இருந்து வருகிறது. விவசாயிகள், பால்பண்ணை உரிமையாளர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.கால்நடைகளை லம்பி வைரஸுக்கு இழந்த விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கும்” எனத் தெரிவித்தார்

இந்த லம்பி வைரஸ் பெரும்பாலும் ஜெர்ஸி பசு, ஹோல்ஸ்டெயின் ப்ரீசெயின் இன மாடுகளுக்குத்தான் அதிகம் வருகிறது.இந்த வைரஸிலிருந்து கால்நடைகளைக் காக்க கோட்பாக்ஸ் தடுப்பூசி செலுத்துவது அவசியம். இந்த தடுப்பூசி லம்பி வைரஸுக்கு எதிராக 100% சிறப்பாக செயல்படுகிறது என கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்

click me!