ஜப்பானைச் சேர்ந்த நிசான் மோட்டார்(கார்) நிறுவனம், தனது சொத்துக்கள் அனைத்தையும் வெறும் ஒரு யூரோவுக்கு ரஷ்யாவின் அரசு நிறுவனத்திடம் ஒப்படைத்து வெளியேறுகிறது.
ஜப்பானைச் சேர்ந்த நிசான் மோட்டார்(கார்) நிறுவனம், தனது சொத்துக்கள் அனைத்தையும் வெறும் ஒரு யூரோவுக்கு ரஷ்யாவின் அரசு நிறுவனத்திடம் ஒப்படைத்து வெளியேறுகிறது.
நிசான் நிறுவனத்துக்கு ஏறக்குரைய 68.70 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதையடுத்து, ரஷ்யாவை விட்டு நிசான் நிறுவனம் வெளியேறுகிறது.
அடுத்த ஆண்டு பட்ஜெட் எப்படி இருக்கும்? நிர்மலா சீதாராமன் சூசகம்
ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் தனது பங்குகள் அனைத்தையும் ரஷ்யாவின் NAMI நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் மீண்டும் நிசான் நிறுவனம் தனது நிறுவனத்தை தொடரலாம் என ரஷ்ய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தப்பின் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவிட்டு வெளியேறியநிலையில் அந்த வரிசையில் தற்போது நிசான் நிறுவனமும் சேர்ந்துள்ளது. ஏற்கெனவே பிரான்ஸ் கார்நிறுவனமான ரெனால்ட் தனது பங்குகள் அனைத்தையும், ரஷ்யாவின் கார் நிறுவனமான அவ்டோவாஸ் நிறுவனத்திடம் விற்றுவிட்டு சென்றது
இதன் மூலம் செயின்பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள நிசான் நிறுவனத்தின் உற்பத்தி, ஆராய்ச்சி வசதிகள், மாஸ்கோவில் உள்ள விற்பனை மற்றும் சந்தைப்பிரிவு ஆகியவை அனைத்தும் ரஷ்ய அரசு நிறுவனமான நாமியிடம் சேரும்.
இந்தியாவுக்கு பாராட்டு!உலகப் பொருளாதார வளர்ச்சியை குறைத்தது செலாவணி நிதியம்(IMF)
நிசான் நிறுவனத்தின் 10000 கோடி யென் இழப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதையடுத்து, இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் மோசமான இழப்பைச் சந்தி்க்கும் முன் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிசான் நிறுவனத்தில் 43 சதவீத பங்குகளை வைத்திருந்த ரெனால்ட் நிறுவனத்துக்கு 33.10 கோடி யூரோ நடப்பு நிதியாண்டின் 2வது பகுதியில் இழப்பு ஏற்பட்டுள்ளது
உக்ரைன் மீதான போருக்குப்பின் ரஷ்யாவுக்கு வர வேண்டிய கார் உதரிபாகங்கள் வரவில்லை என்பதால், கடந்த மார்ச் மாதத்திலிருந்து நிசான் நிறுவனம் தனது கார் தயாரிப்பை நிறுத்தியது. இருப்பினும் ரஷ்யாவில் சூழல் மாறும், மீண்டும் தொழிற்சாலையைத் தொடங்கலாம் என நிசான் நிறுவனம் காத்திருந்தது. ஆனால், அவ்வாறு எந்த சூழலும் வரவில்லை, முன்னேற்றமும் அடையவில்லை.
தங்கம் விலை தொடர் வீழ்ச்சி! 3 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு: இன்றைய நிலவரம் என்ன?
இதற்கிடையே மிட்சுபிஷி மோட்டார்ஸ் நிறுவனமும் ரஷ்யாவிலிருந்து வெளியேறுவது குறித்து ஆலோசித்து வருகிறது. நிசான் நிறுவனத்தின் திடீர் வெளியேற்றத்தால், ரெனால்ட் நிறுவனத்துடனான உறவில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.