தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. கடந்த 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.600க்கு மேல் குறைந்துள்ளது
தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் சரிந்துள்ளது. கடந்த 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.600க்கு மேல் குறைந்துள்ளது
தங்கம் விலை இன்று கிராமுக்கு 10ரூபாயும், சவரனுக்கு ரூ.80 குறைந்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,740 ஆகவும், சவரன், ரூ.37,920 ஆகவும் இருந்தது.
ஊசலாட்டத்தில் தங்கம் விலை! ஒரு வாரத்தில் சவரனுக்கு ரூ.1080 உயர்வு: இன்றைய நிலவரம் என்ன?
இந்நிலையில் புதன்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 10ரூபாய் குறைந்து, ரூ.4,730ஆக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 வீழ்ச்சி அடைந்து, ரூ.37,840ஆக உள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,730ஆக விற்கப்படுகிறது.
தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே சரிந்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் சவரனுக்கு ரூ.1,080 அதிகரித்த நிலையில் இந்தவாரம் சரிவைச் சந்தித்து வருகிறது.
தங்கம் விலை குறைவு! சவரனுக்கு ரூ.280 சரிந்தது: இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை கடும் ஏற்ற இறக்கம் இருப்பது நகைப்பிரியர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும், கடந்த 3 நாட்களாக விலை குறைந்துவருவது, நகை வாங்கும் நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.
அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் இந்த மாதம் 20ம் தேதி நடக்க இருக்கிறது. அமெரிக்காவில் பணவீக்கம் குறையாததையடுத்து, வட்டிவீதத்தை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகத்தெரிகிறது. அவ்வாறு வட்டிவீதம் அதிகரி்க்கும்போது தங்கம் விலை மேலும் குறையலாம், டாலர் மதிப்பு வலுப்பெறும் போது தங்கத்தின் தேவை குறையத் தொடங்கும்.
தங்கம் விலை 2வது நாளாகச் சரிவு! சவரன் 38,000க்கு கீழ் வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.63.00 ஆகவும், கிலோவுக்கு ரூ.1000 சரிந்து, ரூ.63000 ஆகவும் விற்கப்படுகிறது