இன்டேன் நிறுவனத்தின் சமையல் சிலிண்டர் விலை ஜூலை 1ம் தேதியான இன்று குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சிலிண்டருக்கு ரூ.182 முதல் ரூ.190 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
இன்டேன் நிறுவனத்தின் வர்தத்க ரீதியான சமையல் சிலிண்டர் விலை ஜூலை 1ம் தேதியான இன்று குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி சிலிண்டருக்கு ரூ.182 முதல் ரூ.190 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்திய ரூபாய் மதிப்பு 80ஆக வீழச்சி அடையும்
ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியிலும், 16ம்தேதியிலும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து இன்டேன் நிறுவனம் அறிவித்துள்ளதாக லைவ் இந்துஸ்தான் நாளேடு தெரிவித்துள்ளது.
இதன்படி, டெல்லியில் ஜூலை1ம்தேதி முதல் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.198 குறைக்கப்பட்டுள்ளது. மும்பையில் ரூ.190.50, கொல்கத்தாவில் ரூ.182 விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்டேன் சிலிண்டர் விலை ரூ.187 குறைக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்கு முழுக்கு: சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது மத்திய அரசு
ஆனால், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையலுக்கான 14.2 கிலோ சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த மே 19ம்தேதி என்ன விலையில் விற்கப்படுகிறதோ அதை விலையில் தொடர்கிறது. அதாவது சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.1019 ஆக விற்கப்படுகிறது. டெல்லியில் ரூ.1003, மும்பையில் ரூ.1003, கொல்கத்தாவில் ரூ.1029 என்ற விலையில் விற்கப்படுகிறது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாற்றப்படாமல் நீடிக்கிறது. சிறிய விலை மாற்றம் கூட மக்களின் அன்றாட வாழ்வில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும், பணவீக்கத்தை அதிகப்படுத்தும் என்பதால், விலை மாற்றப்படாமல் நீடிக்கிறது.
வணிகநிறுவனங்களுக்கான 19கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.135 குறைக்கப்பட்டது. ஆனால், கடந்த மே மாதத்தில் வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை இரு முறை உயர்த்தப்பட்டது. மே7ம் தேதி ரூ.50, மே 19ம்தேதியும் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜூலையில் வங்கிகளுக்கு 14 நாட்கள் விடுமுறை: பட்டியலை வெளியிட்டது RBI
பெருநகரங்களில் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர் விலை நிலவரம்