itr filing: வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்றீங்களா! இந்த 5 விஷயத்தைத் தெரிஞ்சுக்கோங்க

By Pothy Raj  |  First Published Jun 30, 2022, 5:52 PM IST

வருமானவரி செலுத்தும் நேரம் வந்துவிட்டது. வருமானவரி செலுத்துபவராக இருந்தால், விரைவாக ரிட்டனை தாக்கல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தி வருமானவரி அலுவலகத்திலிருந்து தானாகவே மின்அஞ்சல் வந்திருக்கும்.


வருமானவரி செலுத்தும் நேரம் வந்துவிட்டது. வருமானவரி செலுத்துபவராக இருந்தால், விரைவாக ரிட்டனை தாக்கல் செய்யுங்கள் என்று அறிவுறுத்தி வருமானவரி அலுவலகத்திலிருந்து தானாகவே மின்அஞ்சல் வந்திருக்கும்.

எளிதாகத் தொழில் செய்ய ஏற்ற மாநிலங்கள்: ஆந்திரா, தெலங்கனா, குஜராத் டாப் கிளாஸ்

Tap to resize

Latest Videos

 ஜூலை 31ம் தேதி ஐடி.ரிட்டனைத் தாக்கல் செய்ய கடைசித் தேதியாகும். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் காலநீட்டுப்பி வழங்கப்படுகிறது

சொந்தமாகத் தொழில்செய்பவராக இருக்கலாம், மாத ஊதியம் பெறுபவராக இருக்கலாம், யாராக இருந்தாலும் வருமானவரி செலுத்தும் வரம்புக்குள் வந்துவிட்டால் வருமானத்தின் ஆதாரங்கள், முதலீடு ஆவணங்கள் ஆகியவற்றை ரிட்டனில் தெரிவிக்க வேண்டும். சரியான நேரத்தில் வருமானவரியைச் செலுத்தும்போது, எளிதாகக் கடன் கிடைக்கும்.

வருமான வரி செலுத்துவோர் அவசியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய 5அம்சங்கள் உள்ளன அவை.

PPF, NSC உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி வீதம் உயர்கிறது

ஃபார்ம்16(form16)

வருமானவரி செலுத்துவோர் இந்த நிறுவனத்தில்தான் பணியாற்றுகிறார், அவரின் ஊதியம், டிடிஎஸ் பிடிப்பு ஆகியவற்றை குறிப்பிட்டு தரப்படுவதுதான் ஃபார்ம்16. இது ஏ மற்றும் பி ஆகிய இரு பிரிவுகளில் உள்ளன. பிரிவு ஏஎன்பது, வருமானவரி செலுத்தும் ஊழியர், நிறுவனத்தின் விவரங்களான பெயர், முகவர், பான், டான் விவரம், பணியாற்றும் காலம், டிடிஎஸ் பிடித்தம், அரசுக்குச் செலுத்தியது ஆகிய விவரங்கள் இருக்கும். பி படிவம் என்பது, ஊதியம் வழங்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள், பிடித்தம், வரி செலுத்தும் அளவு ஆகியவை இருக்கும்

ஃபார்ம் 26ஏஎஸ்
வருமானவரித் துறையினரால் வழங்கப்படுவது ஃபார்ம்26ஏஎஸ். ஒரு நிதியாண்டில் நாம் எவ்வளவு வரி செலுத்தியுள்ளோம், வரித் தள்ளுபடி செய்யப்பட்டதைக் குறிக்கும். இந்த ஆவணத்தை வருமானவரித்துறை இணையதளத்திலிருந்து பெறலாம்.

80சி படிவம்:
வருமானவரிச்சட்டம் 80சி படிவம் என்பது, வருமானவரி செலுத்துவோர் தான் செய்துள்ள முதலீட்டு விவரங்களைத் தெரிவிப்பதாகும். இதில் பிபிஎப், என்எஸ்சி, யுலிப்ஸ், இஎல்எஸ்எஸ், எல்ஐசி ஆகியவை அடங்கும். முதலீட்டு ஆவணங்களை, ரசீதுகளை வைத்திருப்பதுஅவசியம்.

பான்-ஆதாரை இணைச்சாச்சா!ஜூலை முதல் 2 மடங்கு அபராதம்: எவ்வாறு இணைப்பது, பரிசோதிப்பது?

நிகர வரிவிதிப்பு வருமானம்: 
உங்களின் மொத்த வருமானம், 80சி முதலீடுகளால் கழிக்கப்பட்டபின், இருக்கும் வருமானமே நிகர வரிக்குட்பட்ட வருமானமாகும்

Form-16 என்றால் என்ன? அடிப்படைத் தகவல்கள்: கேள்விகளும் பதில்களும்

டிடிஎஸ்:
வருமானவரிக்கு உட்பட்ட வருமானம் ஈட்டுபவராக இருந்தால், முன்கூட்டியே வருமானவரி பிடித்தம் செய்யப்பட்டு, நிறுவனத்தால் அரசுக்கு செலுத்தப்படுவது டிடிஎஸ். வருமானவரி கணக்குகளை, முதலீட்டு கணக்குகளைத் தாக்கல் செய்தபின் நாம் செலுத்தியதை திரும்பப் பெறலாம்.

click me!