lic share : எப்படி இருந்தவுங்க இப்படி ஆயிட்டாங்க: எல்ஐசி பங்குதாரர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி இழப்பு

By Pothy RajFirst Published Jun 8, 2022, 1:28 PM IST
Highlights

lic share:வரலாற்றில் இல்லாத வகையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று சரிந்தது. இதனால் லிஸ்டிங் செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரை பங்குதாரர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

வரலாற்றில் இல்லாத வகையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று சரிந்தது. இதனால் லிஸ்டிங் செய்யப்பட்ட நாளில் இருந்து இதுவரை பங்குதாரர்களுக்கு ரூ.1.20 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பெரிய பொதுத்துறை நிறுவனம், பங்குகளை வாங்கினால் லாபம் கிடைக்கும் என்று நினைத்து வாங்கிய எல்ஐசி பாலிசிதாரர்கள், சில்லரை முதலீட்டாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் கண்ணீர் வடிக்கிறார்கள். 

கடந்த மாதம் 17ம் தேதி ரூ.949க்கு என்று நிர்ணயம் செய்யப்பட்ட எல்ஐசி பங்கு மதிப்பு, ரூ.752.90 ஆகக் குறைந்துள்ளது. அதாவது கடந்த 23 நாட்களளில் எல்ஐசி நிறுவனப் பங்கு 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

பங்குவிலை முதல்முறையாக கடும் வீழ்ச்சி அடைந்து, சந்தை மதிப்பு ரூ.4.80 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. ஏறக்குறைய 23 நாட்களில் ரூ.6 லட்சம் கோடியிலிருந்த எல்ஐசி மதிப்பு ரூ.4.80 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. 
பங்குகளை விற்காமல் இருந்தால்கூட எல்ஐசி மதிப்பு குறைந்திருக்காது, பங்குகளை விற்பனை செய்யவைத்து, இப்போது எல்ஐசி மதிப்பே குறைந்துவிட்டது. 

மத்தியஅரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளில் 3.5 சதவீதப் பங்குகளை விற்பனை செய் ரூ.20 ஆயிரம் கோடி திரட்டியது. எல்ஐசி ஐபிஓவுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 3 மடங்கு ஆதரவு குவிந்தது.

சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒரு வங்கு ரூ.905 ஆகவும், பாலிசிதாரர்க்களுக்குரூ.889 விலையிலும் விற்கப்பட்டது. இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதம், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கப்பட்டது.இறுதியாக எல்ஐசி நிறுவனத்தின் 31.6 கோடி பங்குகளில் ஒரு பங்கு ரூ.949 என நிர்ணயிக்கப்பட்டது

எல்ஐசி பங்குகள் கடந்தமாதம் 17ம் தேதி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதில் எல்ஐசி பங்கு விற்பனையை விலையை விட 8 சதவீதம் குறைவாக ஒரு பங்கு ரூ.867க்கு விற்பனை செய்யப்பட்டது. எல்ஐசி  பங்குகள் மதிப்பு ரூ.6 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்ட நிலையில் ரூ.5.57 லட்சம் கோடியாகக் குறைந்தது. 

 அடுத்தடுத்த நாட்களில் எல்ஐசி முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ரூ.6 லட்சத்து 242 கோடியாக இருந்த எல்ஐசி பங்கு மதிப்பு, ரூ.42 ஆயிரத்து 500 கோடி குறைந்து, ரூ.5 லட்சத்து 57ஆயிரதத் 675 கோடியாகக் குறைந்தது. 

கடந்த வாரத்திலிருந்து எல்ஐசி பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. பங்குச்சந்தையில் 7வது நாளாக எல்ஐசி பங்கு நேற்றும் சரிந்தது. லிஸ்டிங் விலையைவிட மிகக் குறைவாக ஒரு பங்கு ரூ.752க்கு வீழ்ச்சி அடைந்தது. கடந்த மாதம் 17ம் தேதி லிஸ்டிங் செய்யப்பட்டதிலிருந்து இதுவரை 20சதவீதம் எல்ஐசி பங்கு விலை குறைந்துள்ளது.
 

click me!