upi: rupay credit card: கிரெடிட் கார்டுகளும் UPI செயலியில் இணைக்கப்படும்: சக்திகாந்த தாஸ் அறிவிப்பு

By Pothy RajFirst Published Jun 8, 2022, 12:27 PM IST
Highlights

upi : rupay credit card:யுபிஐ பேமெண்ட்களன் செயல்பாடுகளில் முக்கிய முன்னேற்றமாக, கிரெடிட் கார்டுகளையும் யுபிஐ செயலிகளில் இணைக்கும் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்  என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

upi : rupay credit card:யுபிஐ பேமெண்ட்களன் செயல்பாடுகளில் முக்கிய முன்னேற்றமாக, கிரெடிட் கார்டுகளையும் யுபிஐ செயலிகளில் இணைக்கும் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்  என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

இ்தற்கு முன் யுபிஐ பேமென்ட்களில் டெபிட்கார்டுகளை மட்டும் இணைக்கும் வசதி இருந்தநிலையில் இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் இணைக்கலாம். 

முதலில் ரூபே கிரெடிட் கார்டுகள் யுபிஐயில் இணைக்கும் வசதி கொண்டுவரப்பட்டு அதன்பின், விசா, மாஸ்டர்கார்டுகள் இணைக்கும் வசதி நீட்டிக்கப்படும். அதுவரை வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டுகளை மட்டும்தான் இணைத்திருக்க முடியும்.
ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் முடிந்தபின் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திதாஸ் தாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பயனாளிகளின் சேமிப்புக் கணக்குகளுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டுகளை அல்லது நடப்புக்கணக்குகளை யுபிஐ பேமெண்டில் இணைத்துக்கொள்ளும் வசதி இருந்து வருகிறது. இனிமேல் பயனாளிகள் கிரெடிட் கார்டுகளையும் யுபிஐ செயலியில் இணைக்கும் வசதி கொண்டு வரப்பட உள்ளது.முதலில் ரூபே கிரெடிட் கார்டுகள் யுபிஐ பேமெண்ட்களில் இணைக்கப்படும். அதன்பின் படிப்படியாக மற்ற கிரெடிட் கார்டுகள் இணைக்கப்படும்” எனத் தெரிவித்தார்

ஆனால், வணிகர்களுக்கான தள்ளுபடி வீதம்(எம்டிஆர்) எவ்வாறு யுபிஐ பரிமாற்றத்தில் எடுக்கப்படும் என்பது குறித்த தெளிவான வரையரை இல்லை. ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும், குறிப்பிட்ட தொகையை வர்த்கர் கட்டணமாகச் செலுத்துவார், இதை வங்கியும், பேமெண்ட் சர்வீஸ் வழங்கும் நிறுவனமும் பகிர்ந்து கொள்ளும். 

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் 3லட்சம் கோடி டாலர் முதல் 4 லட்சம் கோடி டாலர் வரை வளரக்கூடும்.தற்போது 2.5 லட்சம் டாலர் முதல் 2.7 லட்சம் டாலர் வரை சந்தை மதிப்பு இருக்கிறது.

2021-22ம் நிதியாண்டில் மேற்கொள்ளும் ஒட்டுமொத்த டிஜிட்டல் பேமெண்ட்டில் 60 சதவீதம் யுபிஐ பேமெண்ட்டாக இருந்துள்ளது, ஏறக்குறைய ஒருலட்சம் கோடி டாலரைக் கடந்துள்ளது. 

டெபிட் கார்டுகளைவிட கிரெடிட் கார்டுகளுக்கு எம்டிஆர் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும். அதாவது 2 சதவீதம் முதல் சதவீதம் எம்டிஆர் வசூலிக்கப்படும் என்பதால், இன்னும் அது குறித்த தெளிவான வரையரை வரவில்லை.

click me!