rbi: repo rate: வட்டிவீதம் உயர்வால் யாருக்கு பாதிப்பு? கார், வீட்டுக்கடன் வாங்கியவர்கள் தப்பிக்க முடியுமா?

By Pothy RajFirst Published Jun 8, 2022, 1:11 PM IST
Highlights

rbi : repo rate :ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியதையடுத்து, கடனுக்கு மாதத்தவணை(இஎம்ஐ) செலுத்துவோர், வட்டி செலுத்துவோர் அதிகமான சிக்கலைச் சந்திப்பார்கள்.

ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியதையடுத்து, கடனுக்கு மாதத்தவணை(இஎம்ஐ) செலுத்துவோர், வட்டி செலுத்துவோர் அதிகமான சிக்கலைச் சந்திப்பார்கள்.

ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் இன்று அறிவித்தார். அதில் முக்கியமாக “ நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடனுக்கான வட்டிவீதத்தை மேலும் 50 புள்ளிகள் உயர்த்து நிதிக்கொள்கைக்குழு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து 4-வது மாதமாகபணவீக்கம் அதிகரித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

கடந்த மே 4ம் தேதி கடனுக்கான வட்டி 40 புள்ளிகள் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று 50 புள்ளிகள் உயர்த்தப்பட்ட நிலையில் மொத்தம் 90 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன. 

இந்த வட்டிவீத உயர்வால் கடனுக்கான வட்டிவீதம் அதிகரி்க்கும், பொருட்கள்,பணிகளை விலைக்கு வாங்கும்போது, இஎம்ஐ செலுத்துவோர் அதிகமான தொகையை செலுத்த வேண்டியதிருக்கும். 

2019ம் ஆண்டு அக்டோபர்1ம் தேதிமுதல் சில்லரைக் கடன்கள் அனைத்தும் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையில் ப்ளோட்டிங் ரேட் அடிப்படையில் வட்டி நிர்ணயிக்கப்படுகிறது. ஆதலால், இந்த வட்டிவீத உயர்வு சில நாட்களில் அமலுக்கு வந்துவிடும். பெரும்பாலும் வீட்டுக்கடன்கள் அனைத்தும் ப்ளோட்டிங் ரேட்டில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 90 புள்ளிகள் வட்டி உயர்வு வட்டியை மேலும் அதிகரிக்கும்.

தனிநபர் கடன் மற்றும் கார் வாங்ககடன் வாங்கியவர்கள் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் போல் கவலைப்படத் தேவையில்லை. பெரும்பாலான கார் கடன்கள், தனிநபர் கடன்கள் அனைத்தும் நிலையான வட்டியில் வழங்கப்படுபவை. இவர்கள் தவிர பிற கடன்கள் வாங்கியவர்கள்தான் சந்தையில் நிலவும்வட்டிக்கு ஏற்ப வட்டி செலுத்த வேண்டும். 

கடந்த ஒரு மாதத்துக்குள் வட்டியில் 90 புள்ளிகள் உயர்த்தப்பட்டதன் மூலம் மக்கள் மத்தியில் இருக்கும் பணப்புழக்கம் கடுமையாகக் குறையும். கடந்த மே 4ம் தேதி 40 புள்ளிகள் உயர்த்தப்பட்டபோது, ரூ.80 ஆயிரம் கோடி பணம் வங்கி செயல்முறைக்குள் கொண்டுவரப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. இப்போது 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டிருப்பதால், ஏறக்குறைய ரூ.ஒருல ட்சம் கோடி பணம் வங்கி செயல்முறைக்குள் கொண்டுவரப்படும்.

இதனால் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நுகர்வு என்பது கடினமானதாகிவிடும். மே மாதத்துக்கு முன்புவரை ஒருவர் ரூ.ஒரு கோடிவரை கடன் பெறத் தகுதியானவர் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால், இந்த மதிப்பு தற்போது ரூ.80லட்சமாகக் குறைந்துவிட்டது. நம்முடைய கடன்பெறும் தகுதி நேரடியாக, இஎம்ஐ செலுத்தும் தகுதியுடன் இணைந்துவிடும்.

உதாரணமாக, ரூ.ஒரு லட்சத்துக்கு 6.5 சதவீத வட்டியில் மாதம் ரூ.675 வட்டி செலுத்துகிறார்கள், கடனை திருப்பிச் செலுத்தும் காலம் 300மாதங்கள். ஆனால், இரு வட்டிவீத உயர்வால் 90 புள்ளிகள் உயர்ந்துவிட்டநிலையில் ரூ.ஒருலட்சத்துக்கு வட்டி வீதம் ரூ.732 ஆக உயரும், இஎம்ஐ செலுத்தும் தகுதி சுருங்கும்.

வீட்டுக்கடன் வாங்கியவர்கள் 20 ஆண்டுகள் காலத்தில் 7சதவீதம் வட்டியில் திருப்பிச் செலுத்தவதாக இருக்கும். ஆனால் அடுத்தடுத்து இரு வட்டிவீத உயர்வால், வட்டி வீதம் 7.50சதவீதமாக உயரும், திருப்பிச் செலுத்தும் காலம் 2 ஆண்டுகள் அதிகமாகும். 

ஆனால், வங்கியில் டெபாசிட் தொகை செய்திருப்பவர்களுக்கு இந்த இரு வட்டிவீத உயர்வால் வட்டி அதிகமாகக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

click me!