june bank holidays : ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை: முழுமையான விவரம்

Published : May 25, 2022, 03:35 PM IST
june bank holidays : ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை: முழுமையான விவரம்

சுருக்கம்

june bank holidays : june bank holidays 2022 :வரும் ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து 2-வது சனி, 4-வது சனி மற்றும் கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு 8 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து 2-வது சனி, 4-வது சனி மற்றும் கூடுதலாக 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்கள் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்பமாறுபடும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கான விடுமுறை குறித்து ரிசர்வ் வங்கி பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் வார இறுதிநாட்கல் தவிர்த்து கூடுதலாக இரு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்கள், நகரங்களில் இந்த விடுமுறை மாறுபடும். ஆதலால் வங்கி தொடர்பான பணிகளுக்குச் செல்லும் மக்கள் வங்கி விடுமுறை நாட்களை அந்தந்த மாநிலங்களில் அறிந்துகொள்வது அவசியம்.

ஜூன் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள்

2022, ஜூன்2: மகாராணா பிரதாப் ஜெயந்தி(சிம்லாவில் ஜூன் 2ம் தேதி ராணாபிரதாப் ஜெயந்திக்காக விடுமுறைவிடப்படும்) 

2022, ஜூன் 15: ஒய்எம்ஏ நாள், குரு ஹர்கோவிந்த் ஜி பிறந்ததினம், ராஜா சங்கராந்தி (அய்ஸ்வால், புவனேஷ்வர், ஜம்மு, ஸ்ரீநகர் ஆகியவற்றில் ஜூன் 15ம் தேதி ஒய்எம்ஏ நாள், குரு ஹர்கோவிந்த் ஜி பிறந்தநாள், ராஜா சங்கிராந்திக்காக விடுமுறை விடப்படும்)

2022, ஜூன் 5: வாரவிடுமுறை(ஞாயிறு)

2022, ஜூன் 11: 2-வது சனிக்கிழமை

2022, ஜூன் 12: வார விடுமுறை(ஞாயிறு)

2022, ஜூன் 19: வார விடுமுறை(ஞாயிறு)

2022, ஜூன் 25: 4-வது சனிக்கிழமை

2022, ஜூன் 26: வார விடுமுறை(ஞாயிறு)


 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

பிக்சட் டெபாசிட்டுக்கு எந்த வங்கி அதிக வட்டி தருது தெரியுமா? முழு விபரம் உள்ளே!
Indigo: மீண்டும் நல்ல பெயர் எடுக்க முயற்சிக்கும் இண்டிகோ! கிஃப்ட் வவுச்சர், இழப்பீடு என தாராளம்.!