ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக திகழும் உன்ஜாவில் ஒரு குவிண்டால் சீரகம் விலை கடந்த வார இறுதியில் ரூ. 40,615ஆக இருந்தது.
மோசமான சீதோஷண சூழல் காரணமாக சீரகம் உற்பத்தி குறைந்து ஒரு குவிண்டால் விலை ரூ. 36,000லிருந்து 39,765 ஆக அதிகரித்துள்ளது.
முக்கியமாக கடந்த வெள்ளிக்கிழமை ஒரு குவிண்டால் சீரகம் விலை ரூ. 40,000 ஆக மேசனா மாவட்டத்தில் இருக்கும் உன்ஜா விவசாய உற்பத்தி சந்தையில் அதிகரித்து காணப்பட்டது. மார்ச் மாதத்திற்கு முன்பு இருந்து பருவநிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக குஜராத் மற்றும் ராஜ்ஸ்தான் மாநிலங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக திகழும் உன்ஜாவில் ஒரு குவிண்டால் சீரகம் விலை கடந்த வார இறுதியில் ரூ. 40,615ஆக இருந்தது.
இதையும் படிங்க;- Gold Rate Today : மீண்டும் உயர தொடங்கியது தங்கம் விலை.. எவ்வளவு கேட்டா ஷாக் ஆகிடுவீங்க..!
குறைந்தபட்ச விலையாக ரூ. 27,500த்துக்கு விற்கப்பட்டது. மேலும், அன்றைய தினம் 32.000 பைகள் மட்டுமே வந்த காரணத்தினால் விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.32,500 ஆக இருந்தது. ஒரு நாளில் 55 கிலோ கிராம் அல்லது 0.55 குவிண்டால் ஜீரா (மொத்தம் 17,600 குவிண்டால்) கொண்ட 32,000 பைகள் வந்தன.
கடந்த வியாழன் அன்று, விலை ரூ.38,200 முதல் ரூ.27,750 வரை இருந்ததாகவும், சுமார் 22,000 மூட்டைகள் (12.100 குவிண்டால்கள்) மட்டுமே வந்ததாகவும் ஏபிஎம்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீரகத்தின் சராசரி விலை 2021-22-ல் பருவகாலத்தில் ரூ.18,000 ஆக இருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் விலை அதிகரித்து வந்துள்ளது. டிசம்பர் 2-ம் தேதி ரூ.25,000 ஆக இருந்த விலை டிசம்பர் 23-ம் தேதிக்குள் ரூ.30,000 ஆக உயர்ந்தது. அதன் பிறகும் தொடர்ந்து விலை அதிகரித்து, ஜனவரி 5 ஆம் தேதி ரூ.35,500 ஆக உயர்ந்தது. இதனால், நடப்பு காலாண்டில் முதல் மூன்று மாதங்களில் மட்டும் ஒரு குவிண்டாலுக்கு ரூ.5,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த நான்கு மாதங்களில் வரலாறு காணாத விலையை எட்டியுள்ளது.
மார்ச் மாதத்தில் பெய்த பருவமழையால் இரண்டு முக்கிய சீரகம் விலையும் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதி மற்றும் ராஜஸ்தானில் மகசூல் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டது. குறைந்த விளைச்சல் காரணமாக, சீசனின் தொடக்கத்தில் 70 லட்சம் பைகள் (3.85 லட்சம் குவிண்டால்) உற்பத்தி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால், தற்போது இந்தியாவின் சீரக உற்பத்தி மொத்த அளவு சுமார் 50 லட்சம் பைகள் (அல்லது 2.75 லட்சம் குவிண்டால்கள்) மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விலை அதிகரித்து காணப்படுகிறது.
இதையும் படிங்க;- EMI ல் மாம்பழம் வாங்கலாம்! புகழ்பெற்ற அல்போன்சா மாம்பழத்தை ருசிக்க சூப்பர் சலுகை!
பொதுவாக சீரகம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதைக்கப்பட்டு, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. மார்ச் முதல் மே வரை சந்தையில் சீரகத்திற்கான உச்ச பருவமாக கருதப்படுகிறது. ஆனால் நவம்பரில் விதைக்கப்பட்ட விதைகள் அதிக வெப்பம் காரணமாக சரியாக முளைக்காததால், ராஜஸ்தானில் உள்ள பல விவசாயிகள் டிசம்பரில் இரண்டாவது முறையாக சீரகத்தை விதைக்க வேண்டியிருந்தது. இதனால், அந்த மாநிலத்தில் அறுவடை தாமதமானது என்று சீரக உற்பத்தி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சீரகம் சந்தைக்கு ஏப்ரல் மாதத்தில் அதிகளவில் வரும். ஆனால், இந்த ஆண்டு, வரத்து அதிகரிக்காமல், நாளொன்றுக்கு 30,000 முதல் 40,000 மூட்டைகள் மட்டுமே வரத்து உள்ளது. இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பாதியாகும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.