நானே டிரைவராக இருந்தபோதுதான் அந்த கஷ்டங்கள் புரிந்தன: மனம் திறக்கும் உபெர் சிஇஓ

By SG Balan  |  First Published Apr 10, 2023, 10:36 AM IST

புகழ்பெற்ற உபெர் வாடகை கார் நிறுவனத்தின் சிஇஓ தாரா கோஸ்ரோஷாஹி கோவிட்-19 தொற்று காலத்தில் சில மாதங்கள் தானே டிரைவராக இருந்தது பற்றிய சுவாரஸ்ய தகவல்களைக் கூறியிருக்கிறார்.


கொரோனா தொற்று காலத்தில் ஓட்டுநர்களின் அனுபவங்களைப் புரிந்துகொள்வதற்காக தானும் ஓட்டுநராக பல மாதங்கள் பணிபுரிந்ததாக உபெர் தலைமை நிர்வாக அதிகாரி தாரா கோஸ்ரோஷாஹி தெரிவித்துள்ளார். இந்தச் சோதனை நிறுவனத்தின் ஒவ்வொரு அனுமானத்தையும் மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சில மாதங்களில் உபெர் தலைமை நிர்வாக அதிகாரி கோஸ்ரோஷாஹி சான் பிரான்சிஸ்கோ மலைகளைச் சுற்றி மக்களை அழைத்துச் செல்லும் டிரைவராக பல பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் இதழுக்கு கோஸ்ரோஷாஹி அளித்த பேட்டியில், தான் ஓட்டுநராகப் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

Tap to resize

Latest Videos

EMI ல் மாம்பழம் வாங்கலாம்! புகழ்பெற்ற அல்போன்சா மாம்பழத்தை ருசிக்க சூப்பர் சலுகை!

"ஒட்டுமொத்த தொழில்துறையும், ஓரளவிற்கு, ஓட்டுநர்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என நினைக்கிறேன்" என்ற கோஸ்ரோஷாஹி உபெர் ஆப்பில் முக்கிய மாற்றங்களைச் செய்வதற்காக சிறிது காலம் ஓட்டுநராக இருந்திருக்கிறார். உபெர் டிரைவராக தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் போது, டிரைவராகப் பதிவு செய்ய சிரமப்பட்டதாகவும் உபெர் சிஇஓ கூறியுள்ளார்.

அவர் ஓட்டுநராக இருந்த காலத்தில், சில சவாரிகளை ஏற்காமல் நிராகரித்ததற்காக தண்டிக்கப்பட்டார்; வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளனர். ஓட்டுநராக இவைபோல இன்னும் பல சவால்களையும் எதிர்கொண்டது, உண்மையில் வாடகை கார் ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன என்று புரிந்துகொள்ள உதவியாக இருந்தது என்று கோஸ்ரோஷாஹி தெரிவிக்கிறார்.

ஒரே முறை பிரிமீயம் செலுத்தினால் நிரந்தர பென்ஷன்... எல்ஐசியின் சூப்பர் பாலிசி!

தான் டிரைவராக செயல்பட்ட காலத்தில் பழைய டெஸ்லா கார் ஒன்றை எடுத்துக்கொண்டு சவாரிகளுக்குச் சென்றதாகவும் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பயணத்தின் போது சிறந்த பாடல்கள் ஒலிபரப்பியதாவும் அவர் சொல்கிறார். இதற்காக  பிரத்யேகமாக ஸ்பாட்டிஃபை பிளேலிஸ்ட் உருவாக்கி வைத்திருந்ததாவும் கோஸ்ரோஷாஹி தனது பேட்டியில் நினைவூகூர்கிறார்.

2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து உபெர் நிறுவனம் மிகப்பெரிய வணிக் வாய்ப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. ஆனால், 2021ஆம் ஆண்டில் உபெர் நிறுவனம் டிரைவர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டது. அதிக ஓட்டுநர்களை பணியில் ஈடுபடுத்த அவர்களுக்கு போனஸ் வழங்கினால் மட்டும் போதாது என்று கண்டறிந்தது. ஓட்டுநர்கள் கேட்ட சில கடினமான மாற்றங்களை நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக 2022ஆம் ஆண்டில் உபெர் நிறுவனத்தின் வருவாய் இருமடங்காக அதிகரித்தது.

ஒரே முறை பிரிமீயம் செலுத்தினால் நிரந்தர பென்ஷன்... எல்ஐசியின் சூப்பர் பாலிசி!

click me!