Jeep meridian : சக்திவாய்ந்த டீசல் என்ஜினுடன் மெரிடியன் மாடல் - சூப்பர் அப்டேட் கொடுத்த ஜீப்

By Kevin KaarkiFirst Published Feb 25, 2022, 10:56 AM IST
Highlights

இந்திய சந்தைக்கான புதிய ஜீப் மெரிடியன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் உற்பத்தி விரைவில் துவங்குகிறது.

இந்தியாவுக்கான ஜீப் மெரிடியன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலுக்கான உற்பத்தி பணிகள் மே மாத வாக்கில் துவங்க இருக்கின்றன. அறிமுகமானதும் இந்த மாடல் ஜீப் காம்பஸ்-க்கும் மேல் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. இந்த மாடல் டீசல் என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். இதே போன்ற மாடலை ஜீப் பிரேசில் நாட்டில் கமாண்டர் பெயரில் விற்பனை செய்து வருகிறது.

புகைப்படங்களின் படி புதிய மெரிடியன் மாடல் காம்பஸ் ஜீப் போன்றே காட்சியளிக்கிறது. இதில் அப்ரைட் ஸ்டான்ஸ், சற்றே வித்தியாசமான கிரில் மற்றும் ஃபேஸ் உள்ளது.  இதன் வீல் டிசைன் மற்றும் ப்ரோஃபைலும் வித்தியாசமாக இருக்கிறது. புதிய மெரிடியன் மாடல் சிங்கில் டோன் மற்றுமே் டூயல் டோன் நிற ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. 

உள்புறமும் காம்பஸ் மாடலில் உள்ளதை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது. எனினும், இந்த மாடலில் மூன்றடுக்கு இருக்கைகள் உள்ளன. இத்துடன் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் floating டிஸ்ப்ளே, டேஷ்போர்டு மற்றும் செண்டர் கன்சோலில் குரோம் பெசல் உள்ளது. 

ஜீப் காம்பஸ் மற்றும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் டிரையல்ஹாக் மாடல்களில் வழங்கப்படும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் புதிய மெரிடியன் மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மெரிடியன் மாடல் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இந்த மாடலில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் உதிரிபாகங்கள் 80 சதவீதம் இந்தியாவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.

click me!