அனைத்துவித வெல்லம் உற்பத்தி, பனை வெல்லம், நாட்டுச்சர்க்கரை, லேபிள் ஒட்டப்பட்ட வெல்லம் ஆகியவை 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் வரும் என கர்நாடக ஜிஎஸ்டி விவகாரங்களைக் கவனிக்கும் அதாரிட்டி ஃபார் அட்வான்ஸ் ரூலிங்(ஏஏஆர்) தெரிவித்துள்ளது.
அனைத்துவித வெல்லம் உற்பத்தி, பனை வெல்லம், நாட்டுச்சர்க்கரை, லேபிள் ஒட்டப்பட்ட வெல்லம் ஆகியவை 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்புக்குள் வரும் என கர்நாடக ஜிஎஸ்டி விவகாரங்களைக் கவனிக்கும் அதாரிட்டி ஃபார் அட்வான்ஸ் ரூலிங்(ஏஏஆர்) தெரிவித்துள்ளது.
இரு பங்குதார நிறுவனங்கள் கமிஷன் ஏஜென்டிடம் வெல்லம் விற்பனை செய்து வந்தன. அப்போது, ஏற்பட்ட பிரச்சினையால் ஏஏஆர் அமைப்பிடம் வழக்குத் தொடரப்பட்டநிலையில் இந்த விளக்கத்தை அளித்துள்ளன.
வளர்ச்சியும் சரிவும்| டாப்-25 கோடீஸ்வரர்கள் வரிசையில்கூட அதானி இல்லை!
கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதிவரை வெல்லம் உள்ளிட்ட ஏராளமான வேளாண் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால்,அதன்பின், லேபிள் ஒட்டப்பட்ட வெல்லம் மற்றும் அனைத்துவகை வெல்லம் உற்பத்திக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.
வெல்லம் தயாரிக்கும் நிறுவனம் ஏஏஆர் அமைப்பிடம் கூறுகையில் “ வெல்லத்தை சாதாரண காகிதத்தில் 5 கிலோ, 10 கிலோ உள்ளிட்ட எடைகளில் வழங்குகிறோம். எந்தவிதமான பேக்கிங்கிலும் வெல்லம் விற்பனை செய்யவில்லை, ஸ்டிக்கரும் ஒட்டவில்லை” எனத் தெரிவித்தது.
ஆனால், ஏஏஆர் அமைப்பு வெளியிட் அறிவிப்பில் “ வெல்லம் ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து விதமான வெல்லம், நாட்டுச்சர்க்கரை,பனை வெல்லம், வெல்லம் தயாரிப்பு, லேபிள் ஒட்டப்பட்ட பிரவுன் சுகர், பிரவுன் சுகர் உற்பத்தி அனைத்துக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இதன் மூலம் அனைத்துவிதமன வெல்லம் உற்பத்தி மற்றும், லேபிள்வெல்லம் ஆகியவை 5 சதவீதம் ஜிஎஸ்டி வரம்புக்குள் வந்துவிட்டன” எனத் தெரிவித்துள்ளது
எல்ஐசிக்கு முதல்முறையாக இழப்பு| அதானி குழும பங்குகளில் முதலீட்டின் மதிப்பு ரூ.50,000 கோடி சரிவு
ஏகேஎம் குளோபல் நிறுவனத்தின் கூட்டாளி சந்தீப் சீகல் கூறுகையில் “ அனைத்து விதமான வெல்லம் உற்பத்தி மற்றும் லேபிள் வெல்லத்துக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி எனத் தெரிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்