"1985இல் எங்களிடம் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், அது இன்று 300 கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும்" எனவும் உதய் கோடக் குறிப்பிட்டுள்ளார்.
கோடக் மஹிந்தரா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து கோடீஸ்வரரான உதய் கோடக் சனிக்கிழமை ராஜினாமா செய்துவிட்டார். இதனால், தற்போதைய இணை நிர்வாக இயக்குநரான தீபக் குப்தா, இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ளார்.
ராஜினாமா செய்தாலும் உதய் கோடக், வங்கியின் குறிப்பிடத்தக்க பங்குதாரராகவும் தொடர்ந்து இருப்பார் எனக் கூறப்படுகிறது. பணியிலிருந்து விலகியது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட பதிவை எழுதியுள்ள உதய் கோடக், தன் வருங்கால திட்டம் பற்றியும் கூறியுள்ளார்.
அதில், 10,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கிய நிறுவனம் இப்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வருமானத்தை அளிக்கும் அளவுக்கு, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்துள்ளது என்பதையும் தனது பதிவில் உதய் கோடக் நினைவுகூர்ந்துள்ளார்.
"1985இல் எங்களிடம் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால், அது இன்று 300 கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும்" எனவும் உதய் கோடக் குறிப்பிட்டுள்ளார்.
இனிமே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாம் ப்ரீ இல்லையா? வசூல் செய்ய புது வழியை உருவாக்கும் மெட்டா!
64 வயதான உதய் கோடக், கோட்டக் மஹிந்தரா வங்கியில் தான் வகிக்கும் பதவிகளில் இருந்து இந்த ஆண்டு இறுதிக்குள் பதவி விலகத் திட்டதாவும், அதற்காக படிப்படியாக நிர்வாகப் பொறுப்புகளை மாற்ற ஏற்பாடுகள் செய்ததாவும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கியின் இயக்குநர்கள் குழுவிற்கு எழுதிய கடிதத்தில், உதய் கோடக், தான் எல்லாவற்றையும் யோசித்ததாகவும், இப்போது ராஜினாமா செய்வது 'நிறுவனத்திற்கு சரியான விஷயம்' என்று நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.
கோடக் மஹிந்தரா வங்கியின் நிறுவனரான உதய் கொடக், 38 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் மூன்று ஊழியர்களுடன் 300 சதுர அடி அலுவலகத்துடன் வங்கியை தொடங்கியதை நினைவுகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஜேபி மோர்கன் மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் அதேபோன்ற நிறுவனத்தைத் திறக்க ஊக்கம் அளித்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. செப்டம்பர் 14-க்குள் இதை செய்து முடிங்க..!
தனது நிறுவனம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளதாவும் உதய் கோடக் தெரிவித்துள்ளார்.
கோடக் மஹிந்தரா வங்கி இந்தியாவை பொருளாதார சக்தி வாய்ந்ததாக மாற்றுவதில் தொடர்ந்து குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என்று நம்புவதாகவும் தனது வாழ்நாள் முழுவதும் நிறுவனத்தின் தூண்களாக இருந்த சக ஊழியர்கள், பங்குதாரர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிப்பதாவும் உதய் கோடக் கூறியிருக்கிறார்.
கோடக் மஹிந்தரா வங்கியின் பங்கு செப்டம்பர் 1 அன்று மும்பை பங்குச்சந்தையில் 0.66 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு ரூ.1,771.30 ஆக இருந்தது. வங்கியின் சந்தை மூலதனம் தற்போது ரூ.3.52 லட்சம் கோடியாக உள்ளது.
ஊழல் திமுக அரசால் நலிவடையும் தென்னை நார் தொழில்: அண்ணாமலை கவலை