உறுதியில்லாத இன்றைய உலகச் சூழலில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள்தான் தாக்குப்பிடிக்கின்றன என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமித்ததோடு தெரிவித்தார்.
உறுதியில்லாத இன்றைய உலகப் பொருளாதாரச் சூழலில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகள்தான் தாக்குப்பிடிக்கின்றன என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமித்ததோடு தெரிவித்தார்.
கடந்த இரு நாட்களுக்கு முன் சர்வதேச செலவாணி நிதியம் வெளியி்ட்டஅறிக்கையில், உலகில் பல நாடுகள் பொருளாதார மந்தநிலையைச் சந்தித்துவரும்போது, இந்தியா சிறப்பாகச் செயல்படுகிறது என்று பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு பட்ஜெட் எப்படி இருக்கும்? நிர்மலா சீதாராமன் சூசகம்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் சர்வதேச செலவாணி நிதியம், மற்றும் உலக வங்கி சார்பில் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்று நேற்று பேசியதாவது:
இன்றைய உலகப் பொருளாதார நிலையற்ற காரணிகளுக்கு மத்தியில், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டும்தான் தாக்குப்பிடித்து சிறப்பாகச்செயல்படுகிறார்கள். இந்தியாவின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு பொருளாதார வளர்ச்சி 13.5 சதவீதமாக இருந்தது என்று தெரிவித்தது. இது வளர்ந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளைவிட அதிகம்.
'தமிழகத்தில் சமஸ்கிருதம் கற்பதை ஊக்கப்படுத்துவதில்லை': நிர்மலா சீதாராமன் வேதனை
இதற்கு காரணம், இந்த இலக்கை அடைவதற்கு முக்கியக் காரணம், இந்தியா நிதி இயல்பு செயல்முறையை மிக விரைவாகத் தொடங்கியது, மக்களிடத்தில் இருக்கும் கூடுதல் பணப்புழக்கத்தை வைப்புத் தொகை மூலம் எடுத்துக்கொண்டது, மே மாதத்திலிருந்து வட்டிவீதம் உயர்த்தி வருவது ஆகியவற்றால்தான் முடிந்தது. நிதிப்பற்றாக்குறையும் கட்டுக்குள் இருக்கிறது. .
இந்தியா கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கொரோனா லாக்டவுனில் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டது. அதன்பின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபிவளர்ச்சி கொரோனாவுக்கு முந்தைய வளர்ச்சியான 3.8 சதவீதத்தைவிடஅதிகரி்த்து 13.8 சதவீதத்தை எட்டியது.
முதல் காலாண்டில் நுகர்வோர் செலவிடுவது விரைவாக அதிகரித்து 26 சதவீதமாக உயர்ந்தது. நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்துதல் மற்றும் தீவிர நடவடிக்கைகளின் காரணமாக இது சாத்தியமாகிறது. இருப்பினும், முக்கிய வர்த்தகம், ஹோட்டல், உணவகம் ஆகியவை கொரோனாவுக்கு முந்தைய நிலையை இன்னும் எட்டவில்லை கடக்கவில்லை. அவ்வாறு கடக்கும்போது பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது
உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவரை கட்டாயமாக நியமக்க வேண்டும்: வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு
முதலீட்டைப் பொறுத்தவரை முதல் காலாண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் போக்குவரத்து துறையிலும், வீட்டுவசதி, கட்டுமானம், உருக்குத்துறை, மருந்துத்துறை, தனியார் ஐடி நிறுவனங்களில் முதலீடு அதிகரித்துள்ளது. சிமெண்ட், உருக்கு, முதலீட்டுப்பொருட்கள், தங்கம் அல்லாத,கச்சா எண்ணெய் அல்லாத இறக்குமதி மற்றும் முதலீடு பயன்பாடு ஆகியவற்றிலும் நல்ல முன்னேறம் தெரிகிறது.
ஏற்றுமதி, இறக்குமதி இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது.ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரித்துள்ளது. இது உள்நாட்டுபொருளாதாரம் மறுமலர்ச்சி அடைவதைக் காட்டுகிறது. உலகப் பொருளாதாரம் மந்தநிலையை எட்டும்போதுகூட இந்தியப்பொருளாதாரம் சிறப்பாக செயல்படுகிறது
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்