தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்குப் பின் நேற்று விலை உயர்ந்த நிலைியில் இன்று சரிந்துள்ளது
தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்குப் பின் நேற்று விலை உயர்ந்த நிலைியில் இன்று சரிந்துள்ளது
தங்கம் விலை இன்று கிராமுக்கு 25ரூபாயும், சவரனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,760 ஆகவும், சவரன், ரூ.38,080 ஆகவும் இருந்தது.
தங்கம் விலை 2வது நாளாகச் சரிவு! சவரன் 38,000க்கு கீழ் வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?
இந்நிலையில் வெள்ளிக்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 25ரூபாய் குறைந்து, ரூ.4,735ஆக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.200 சரிந்து, ரூ.37,880ஆக உள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,735ஆக விற்கப்படுகிறது.தங்கம் விலை வாரம் தொடங்கியதிலிருந்து 3 நாட்கள் விலை குறைந்தது, ஆனால் நேற்று சற்று அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர் வீழ்ச்சி! 3 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு: இன்றைய நிலவரம் என்ன?
அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இம்மாதம் 20ம்தேதி கூடும் பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. அமெரி்க்காவில் வட்டிவீதம் உயர்த்தப்படும்போது, டாலர் மதிப்பு வலுப்பெற்று உலக நாடுகளின் கரன்ஸிகளின் மதிப்பு சரியத் தொடங்கும். இது இந்திய ரூபாய் மதிப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும், தங்கத்தின் தேவையை சர்வதேச அளவில் குறைக்கும்.
இதனால் வரும் வாரங்களில் அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் தங்கம் விலையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடந்த 3 நாட்களாக விலை குறைந்துவருவது, நகை வாங்கும் நடுத்தர மக்களுக்கு சற்று ஆறுதல் அளித்தநிலையில் மீண்டும் உயர்ந்திருப்பது குழப்பத்தை அளித்துள்ளது.
ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை! குழப்பத்தில் நகைப்பிரியர்கள்!: இன்றைய நிலவரம் என்ன?
வெள்ளி விலை சற்றுக் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, ரூ.62.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.300 சரிந்து, ரூ.62,300 ஆகவும் விற்கப்படுகிறது