
பயணிகளுக்கான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டு இருப்பதைப் போல், சரக்குகளையும் அதிவேகத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் செமி-ஹைஸ்பீடு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்போக்குவரத்தை ரயில்வே அமைச்சகம் தொடங்க இருக்கிறது.
இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில், டெல்லி-என்சிஆர் இடையேயும், மும்பை இடையேயும் முதல் கட்டமாக இயக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை தொடரும்: கல்வி அமைச்சர் நாகேஷ் உறுதி
இது தொடர்பாக ரயில்வே வாரியம் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் கடந்த 11ம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அதில் “ நேரத்தையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் சூப்பர் ஃபாஸ்ட் பார்சல் சர்வீஸ் ரயில் இயக்கப்பட உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் சரக்குப் போக்குவரத்து ரயில் பெட்டிகள் கன்டெய்னர்களாக இருக்கும், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். 1800மிமி அகலமான ரேக்குகள், ஆட்டோமேட்டிக் கதவுகள், குளிர்பதனவசதி, சரக்குகளை ஏற்றி இறக்க ரோலர் படிகட்டுகள், லாக்கிங் வசதி ஆகியவை இருக்கும். ஒரு ரயிலில் 264 டன் சரக்குகுகளை ஏற்றலாம்
மக்களுக்கு அடிப்படை வசதிகளைக் கூட முன்பு இருந்த அரசு வழங்கவில்லை: பிரதமர் மோடி தாக்கு
சென்னையில் உள்ள ஐசிஎப் ரயில்பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் மொத்தமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் மாதத்தில் முதல் வந்தே பாரத் சரக்கு ரயில் இயக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி உறுதி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் தீர்ப்பு
முதல் வந்தே பாரத் சரக்கு ரயிலும் டெல்லி-என்சிஆர், மும்பை மண்டலங்கள் இடையே இயக்கப்படும் என்றும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எந்தெந்த இடங்களுக்கு சரக்கு ரயில் இயக்கலாம், வழக்கமாக சரக்குகளை அனுப்பும் வாடிக்கையாளர்கள் யார், எந்தெந்த வழித்தடத்தில் வந்தே பாரத் சரக்கு ரயிலை அனுப்பினநால் லாபம் கிடைக்கும் ஆகியவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மண்டல மேலாளர்களிடம் ரயில்வே வாரியம் கேட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.