இந்தியா நிச்சயமாக 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும்; ஐஎம்எப் தலைமை பொருளாதார வல்லுநர் உறுதி!!

By Dhanalakshmi GFirst Published Oct 13, 2022, 2:36 PM IST
Highlights

இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியா நிச்சயமாக 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் என்று ஐஎம்எப் தலைமை பொருளாதார வல்லுநர் பியரி ஆலிவியர் கோரிஞ்சாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஏற்பட்டு இருக்கும் டிஜிட்டல் மாற்றம் காரணமாக விரைவில் பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும். இந்த மாற்றம் இந்திய பொருளாதார கொள்கை மற்றும் நிதி நிலைபாட்டில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஐஎம்எப் தலைமை பொருளாதார வல்லுநர் பியரி ஆலிவியர் கோரிஞ்சாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நரேந்திர மோடி அரசாங்கம் டிஜிட்டல் மயத்தை ஏற்படுத்தி வருகிறது. இது நிதி, நிர்வாகத்தில் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. திட்டங்களை விரைந்து முடிப்பதற்கு உதவுகிறது. முன்பு இருந்த நிர்வாக சிக்கல்கள் இதன் மூலம் களையப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், ''இதுவரை செய்வதற்கு கடினமாக இருந்தவற்றையும் எளிதாக செய்வதற்கு, இந்திய அரசாங்கம் எடுத்திருக்கும் டிஜிட்டல்மயமாக்கல் பணி எளிதாக்கி உள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் இல்லையென்றால் பணிகளை முடிப்பது மிகவும் சிரமமாக இருந்து இருக்கும். இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. நிச்சயமாக இந்தியாவின் பொருளாதார மற்றும் வளர்ச்சிக்கு இந்த டிஜிட்டல் மயமாக்கல் உதவும் .

cpi inflation data: ஆர்பிஐக்கு நெருக்கடி! செப்டம்பர் சில்லறை பணவீக்கம் 7.41 சதவீதமாக அதிகரிப்பு

இந்தியா போன்ற நாடுகளில் பலருக்கும் வங்கி கணக்குகள் இல்லை. டிஜிட்டல் வாலட் மூலம் தங்களுக்கு பண பரிவர்த்தனைகளை எளிதாக்கிக் கொள்ளலாம். மாடர்ன் பொருளாதாரத்திற்குள் மக்களை கொண்டு வருவது நன்மை பயக்கும். டிஜிட்டல் பொருளாதாரம் வளர்ச்சிக்கான பாதையை வகுத்துக் கொடுக்கும். 

டிஜிட்டல் முறையில் இதுவரை செய்வதற்கு கடினமாக இருந்த பணிகளையும் எளிதில் அரசாங்கத்தால் செய்து முடிக்க முடியும். பாதுகாப்பானதும் கூட. சமீபத்தில் கொரோனா தொற்று மற்றும் எரிபொருள் சிக்கலில் இருந்து, எங்கு தேவை ஏற்படுகிறதோ அங்கு எவ்வாறு உதவுவது என்பதை கற்றுக் கொண்டுள்ளோம். 

இந்தியா 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை விரைவில் அடையுமா என்று கேட்டால், நிச்சயமாக அடையும் என்றுதான் கூறுவேன். நாங்கள் கடந்த காலங்களில் பார்த்து இருக்கிறோம். சில நாடுகள் மிகவும் விரைவாக வளர்ந்து இருக்கின்றன. ஏராளமான வளங்கள் கொட்டிக் கிடக்கும் இந்தியா போன்ற நாடுகளில் எளிதில் இதை அடையலாம். இதை அடைவதற்கு இந்தியா அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்க்களை செய்ய வேண்டியது இருக்கும். 

GST on Paratha: பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி உறுதி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் தீர்ப்பு

இந்த வகையில் இந்தியா ஏற்கனவே ஏராளமான சீர்திருத்தங்களை செய்துள்ளது. டிஜிட்டல் மயமாக்கலின் உதாரணத்தை மேற்கோள் காட்டி, நிதிச் சேமிப்பை மேம்படுத்த அல்லது நிர்வாக சேவைகளுக்கான அணுகு முறையை எளிதாக்க, டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்தப்படும் விதம் ஆகியவையே இந்தியாவில் நடக்கும் புதுமைகளுக்கு சான்றாக உள்ளன'' என்றார்.

click me!