GST on Paratha: பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி உறுதி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் தீர்ப்பு

By Pothy Raj  |  First Published Oct 13, 2022, 11:22 AM IST

பரோட்டோவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி  செல்லும் என தீர்ப்பளித்த மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விவகாரங்களை கவனிக்கும் தீர்ப்பாயமான, அட்வான்ஸ் அத்தாரிட்டி ஆஃப் ரூலிங்(ஏஏஆர்) தீர்ப்பு செல்லுபடியாகும் என்று குஜராத்தின் ஏஏஏஆர் உறுதி செய்துள்ளது.


பரோட்டோவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி  செல்லும் என தீர்ப்பளித்த மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விவகாரங்களை கவனிக்கும் தீர்ப்பாயமான, அட்வான்ஸ் அத்தாரிட்டி ஆஃப் ரூலிங்(ஏஏஆர்) தீர்ப்பு செல்லுபடியாகும் என்று குஜராத்தின் ஏஏஏஆர் உறுதி செய்துள்ளது.

பரோட்டாவும், சப்பாத்தி, ரொட்டி ஆகியவை வெவ்வேறானது அனைத்தையும் ஒரே ரகம் எனக் கருத முடியாது. சப்பாத்தி, ரொட்டி கணக்கில் பரோட்டாவைச் சேர்க்க முடியாது. 

Tap to resize

Latest Videos

4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தொடக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

ஆதலால், பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்தது செல்லும் என்று குஜராத் ஏஏஏஆர் நீதிபதிகள் விவேக் ரஞ்சன், மலிந்த் தோரவானே தீர்ப்பளித்தனர்.

 ரொட்டி, சப்பாத்தி, நான் வகைகளுக்கு 5 சதவீதம் வரியும் பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி தொடர்பான விவகாரங்களைக் கவனிக்கும் அதாரிட்டி ஆப் அட்வான்ஸ் ரூலிங் (ஏஏஆர்) அமைப்பிடம் பல தரப்பினரும் முறையிட்டனர். 

அதற்கு ஏஏஆர் அமைப்பு அளித்த விளக்கத்தில் “சப்பாத்தி, ரொட்டி மற்றும் பரோட்டா என்பது வெவ்வேறு. சமைக்கப்பட்ட உணவுகளுக்கு அதாவது ரெடி டூ ஈட் உணவுகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், சமைக்கப்படும் உணவுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது. 

ஜாக்பாட்! ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: மத்திய அமைச்சரவை முக்கிய முடிவு

அந்த வகையில் பார்த்தால், ரொட்டி, நான், காக்ரா போன்வற்றை கடைகளில் வாங்கியவுடன்அப்படியே சாப்பிட முடியும். ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பரோட்டா, பரோட்டா வகைகளை குறைந்தபட்ச நிமிடங்கள்  சமைத்துதான் சாப்பிட முடியும். ஆதலால்தான், பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி” என விளக்கம் அளித்தது. 

இதை எதிர்த்து குஜராத்தின் ஏஏஏஆர் தீர்ப்பாயத்தில் மனுதாரர்கள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டில் “ பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்தது சரிதான். பரோட்டா வேறு, சப்பாத்தி, ரொட்டி என்பது வேறு” எனக் கூறி ஏஏஆர் தீர்ப்பை உறுதி செய்தது.

கழுதை கறி சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்குமா ? ஆந்திராவில் அடிச்சு தூக்கும் விற்பனை !

அந்த தீர்ப்பில், “ மனுதாரர் நடத்தும் உணவு நிறுவனம் 8 வகையான பரோட்டாக்களை தயாரித்து விற்கிறது. மலபார்  பரோட்டா, மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டா, ஆனியன் பரோட்டா, மெதி பரோட்டா, ஆலு பரோட்டா, லச்சா பரோட்டா, மூளி பரோட்டா, ப்ளைன் பரோட்டா ஆகியவற்றை தயாரிக்கிறது. 

பரோட்டாவில் சேர்க்கப்படும் மூலப்பொருட்களில் கோதுமை மாவு, உருளைக்கிழங்கு, காய்கறி, மூளி, வெங்காயம், மேதி உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. கடைகளில் விற்கப்படும் பரோட்டாக்கள் பேக்கிங்கை உடைத்தபின் 3 அல்லது 4 நிமிடங்கள் சூடு செய்யப்பட வேண்டியது அவசியமாகும். 

ஆனால், ரொட்டி, சப்பாத்தி போன்றவை நன்கு சமைக்கப்பட்டவை. அவற்றை அப்படியே சாப்பிடமுடியும். நன்கு சமைக்கப்பட்ட உணவுக்கும், பகுதி சமைக்கப்பட்ட அல்லது சூடுசெய்யப்படவேண்டிய பொருட்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆதலால் சப்பாத்தி, ரொட்டி வகையில் பரோட்டாவைச் சேர்க்க முடியாது. 

கர்நாடக ஹிஜாப் தடை வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வேறுபட்ட தீர்ப்பு

கடைகளில் வாங்கி உடனடியாக சாப்பிடும் உணவுப் பொருட்கள் அதாவது ரெடி டூ ஈட் பொருட்களுக்கு மட்டும் 5 சதவீதம் ஜிஎஸ்டி பொருந்தும். பீட்சா, பிரட், ரஸ்க், டோஸ்டட் பிரட் போன்றவைக்கு மட்டும்தான் 5 சதவீதம் ஜிஎஸ்டி பொருந்தும்.” எனத் தெரிவித்தது

click me!