Mercedes-Benz : 9 மாதங்களில் 28% விற்பனையை அதிகரித்து சக்கை போடு போட்ட மெர்சிடிஸ் பென்ஸ்

By Raghupati RFirst Published Oct 12, 2022, 9:54 PM IST
Highlights

ஜனவரி - செப்டம்பரில் இந்தியாவில் விற்பனை 28% அதிகரித்து 11,469 ஆக உயர்ந்துள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்துள்ளது.

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz) இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் 28 சதவீதம் விற்பனை அதிகரித்து 11,469 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. இது 2021 ஆம் ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்பட்டதை விட அதிகமாகும்.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனம் 8,958 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா அறிவித்துள்ளது.‘இந்த ஆண்டு முதல் ஒன்பது மாதங்களில் CY 2021 விற்பனை எண்ணிக்கையைத் தாண்டியதால், எங்களின் விற்பனை தொற்றுநோய்க்கு முந்தைய நிலையில் உள்ளது.

இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக

தற்போதைய சந்தை வேகம், எங்களின் அதிகபட்ச விற்பனையை அடைய பாடுபடுவதற்கான நம்பிக்கையை அளிக்கிறது’ என்று மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா சிஇஓ மார்ட்டின் ஷ்வெங்க் தெரிவித்துள்ளார். மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா 2021 இல் மொத்தம் 11,242 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

பற்றாக்குறை இருந்தபோதிலும், இந்த ஆண்டு இதுவரை விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது. செப்டம்பர் 2022 நிலவரப்படி மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் மொத்த ஆர்டர் வங்கி 7,000 யூனிட்டுகளுக்கு மேல் உள்ளது. GLS Maybach 600, Maybach S-Class, S-Class மற்றும் AMGs போன்ற டாப்-எண்ட் வாகனங்களுக்கான அதிக தேவை தொடர்வதாக நிறுவனம் கூறியது.

இதையும் படிங்க..Alien : டிசம்பர் 8.! பெரிய விண்கல்லில் ஏலியன்கள் பூமிக்கு வரும்.. கணித்து சொன்ன டைம் ட்ராவலர் - சாத்தியமா ?

மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா தனது அனைத்து-எலக்ட்ரிக் செடான் EQS 580 டெலிவரிகளைத் தொடங்கியுள்ளதாகவும், புதிய முன்பதிவுகள் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த விவகாரம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த திக் திக் நிமிடங்கள் !

click me!