5ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இன்டர்நெட் வேகம் ஏர்டெல் நிறுவனத்தின் நெட்வொர்க் வேகத்தை மிஞ்சியுள்ளது. 600எம்பிபிஎஸ் வேகத்தில் ஜியோ நெட்வொர்க் செயல்படுகிறது என்று ஊக்லா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது
5ஜி சேவையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இன்டர்நெட் வேகம் ஏர்டெல் நிறுவனத்தின் நெட்வொர்க் வேகத்தை மிஞ்சியுள்ளது. 600எம்பிபிஎஸ் வேகத்தில் ஜியோ நெட்வொர்க் செயல்படுகிறது என்று ஊக்லா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது
ஆனால், ஏர்டெல் நெட்வொர்க் 516 எம்பிபிஎஸ் வேகத்தில்தான் பதிவேற்றம், பதிவிறக்கம் செய்கிறது என்று தெரிவித்துள்ளது.
undefined
4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை தொடக்கம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
ஏர்டெல், ஜியோவின் நெட்வொர்ட், பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் வேகம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இரு நிறுவனங்களுக்கு இடையிலான நெட்வொர்க் வேகம் வேறுபாடு குறைந்த இரட்டை இலக்கத்தில் இருக்கிறது. அதிகபட்சமாக 809 எம்பிபிஎஸ் வேகம் இருக்கிறது.
தங்கம் விலை தொடர் வீழ்ச்சி! 3 நாட்களில் சவரனுக்கு ரூ.640 சரிவு: இன்றைய நிலவரம் என்ன?
நாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி கடந்த 1ம் தேதி அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார். ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஆகியவை வர்த்தகரீதியான சேவையை இன்னும் தொடங்கவில்லை.
3 நிறுவனங்களுமே தங்களின் பீட்டா பரிசோதனையில் அதாவது வர்த்தகரீதியான அறிமுகத்துக்கு முன் கடைசிகட்ட பரிசோதனையில் உள்ளன. இதில் ஜியோ, ஏர்டெல் இன்டர்நெட் வேகம் குறித்து ஊக்லா எனும் ஆய்வு செய்து அறிக்கை வெளியி்ட்டுள்ளது.
அதில் “ டெல்லியில் ஏர்டெல் 5ஜி நெட்வொர்க் வேகம் 200 எம்பிபிஎஸ்,198எம்பிஎஸ் பதிவிறக்க வேகமும் இருக்கிறது, ஜியோவின் வேகம் 600 எம்பிபிஎஸ் இருக்கிறது
இதன்படி பார்த்தால் 2 மணிநேரம் ஓடக்கூடிய ஒரு திரைப்படத்தை ஜியோ 5ஜி நெட்வொர்கின் 600எம்பிபிஎஸ் வேகத்தில், பதிவிறக்கம் செய்ய 85 வினாடிகள் போதுமானது, 4கே திரைப்படத்தை பதவிறக்கம் செய்ய 3 நிமிடங்கள் போதும்.
வெறும் ஒரு யூரோவுக்கு சொத்துக்கள் விற்பனை! ரஷ்யாவை விட்டு வெளியேறும் ஜப்பானின் நிசான் நிறுவனம்
பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, சிலிகுரி, வாரணாசி ஆகிய நகரங்களில் தொடங்கிவிட்டது. ஆனால், ஜியோ நிறுவனம் தீபாவளிக்கு முன்பாக சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தாவில் தொடங்கிவிடுவோம் எனத் தெரிவித்துள்ளது
வாரணாசியில் ஏர்டெல் 5ஜி வேகம் 516 எம்பிபிஎஸ் மீடியன் வேகம் இருக்கிறது. கொல்கத்தாவில் ஏர்டெல் மீடியன் டவுன்லோடு வேகம் 33.83 எம்பிபிஎஸ் இருக்கிறது, ஜியோ 482.02 எம்பிபிஎஸ் இருக்கிறது. மும்பையில் ஏர்டெல் 271.07 எம்பிபிஎஸ் மீடியன்டவுன்லோடு வேகம், ஜியோ 515.38 எம்பிபிஎஸ் டவுன்லோடு வேகம் இருக்கிறது.
ஆகஸ்ட் மாதம் அறிக்கையின்படி, உலகளவில் இன்டர்நெட் ஸ்பீட்டெஸ்ட் குளோபல் இன்டெக்ஸ் குறியீட்டில் இந்தியா மொபைல் டவுன்லோடு வேகத்தில் 13.52 எம்பிபிஎஸ் வேகத்தில் 117வது இடத்தில் இருக்கிறது,