நாட்டின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டதகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சில்லறை பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு வெளியிட்டதகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியது, பெட்ரோல்,டீசல் விலை கட்டுக்குள் இருந்ததால், கடந்த இரு மாதங்களாக சில்லறை பணவீக்கம் குறைந்து வந்தநிலையில் செப்டம்பரில் மீண்டும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி உறுதி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் தீர்ப்பு
இந்த பணவீக்க உயர்வால், வட்டிவீதத்தை மேலும் உயர்த்த வேண்டிய நெருக்கடிக்கு ரிசர்வ் வங்கி ஆளாகியுள்ளது. கடந்த மே மாதத்திலிருந்து வட்டிவீதம் உயர்த்தியபோதிலும் பணவீக்கம் குறையவில்லை
உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் பணவீக்கம் அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. செப்டம்பரில் உணவுப் பொருட்கள் பணவீக்கம் 8.60 சதவீதமாக அதிகரித்துள்ளது, ஆகஸ்டில் இது 7.62% என்று இருந்தது.
ரிசர்வ் வங்கி சில்லறைப் பணவீக்கத்தின் அளவை 6 சதவீதத்துக்குள் வைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், 9வது மாதமாக ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு அளவை மீறி பணவீக்கம் சென்று வருகிறது.
ஜாக்பாட்! ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு: மத்திய அமைச்சரவை முக்கிய முடிவு
தேசிய புள்ளியியல் அலுவலகம்(என்எஸ்ஓ) நேற்று வெளியிட்ட விவரங்கள்படி, ஆகஸ்டில் சில்லறை பணவீக்கம் 7 சதவீதமாக இருந்தநிலையில் செப்டம்பரில் 7.41 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 4.35 சதவீதத்தில் இருந்தது.
ரிசர்வ் வங்கியைப் பொறுத்துவரை பணவீக்கம் சராசரி என்பது 4 சதவீதம்தான். அதற்கு மேல் 2 சதவீதம் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். அரசின் புள்ளிவிவரங்கள்படி, தானிய வகைகள் உள்ளிட்டபொருட்களுக்கான பணவீக்கம் 11.53 சதவீதமாகவும், பால் மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கான பணவீக்கம் 7.13 சதவீதமாகவும், காய்கறிகளுக்கான பணவீக்கம் 18.05 சதவீதமாகவும், பருப்பு வகைகளுக்கான பணவீக்கம் 3.05 சதவீதமாகவும், மசாலாப் பொருட்களுக்கான பணவீக்கம் 16.88சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை! குழப்பத்தில் நகைப்பிரியர்கள்!: இன்றைய நிலவரம் என்ன?
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக தானிய வகைகளுக்கான பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது, இது தவிர பருவம் தவறிய மழை, போக்குவரத்து செலவு உயர்வு காரணமாக காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது. பழங்கள் விலை கடந்த மாதத்தைவிட சரிந்து, 5.68 சதவீதமாகக் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்துக்கான பணவீக்கம் 10 சதவீதத்துக்கும் மேல் உள்ளது.