இந்திய கோடீஸ்வரர்கள் ஏன் உள்நாட்டில் அலுவலகம் திறக்காமல் சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில் அலுவலகம் திறக்கிறார்கள் என்பதற்கு காரணம் தெரியுமா. அதற்கான விளக்கத்தை இந்த செய்தித்தொகுப்பு தருகிறது
இந்திய கோடீஸ்வரர்கள் ஏன் உள்நாட்டில் அலுவலகம் திறக்காமல் சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில் அலுவலகம் திறக்கிறார்கள் என்பதற்கு காரணம் தெரியுமா. அதற்கான விளக்கத்தை இந்த செய்தித்தொகுப்பு தருகிறது
ஆசியாவின் 2வது மிகப்பெரிய கோடீஸ்வரரான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடட்(RIL) நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி சமீபத்தில் சிங்கப்பூரில் குடும்ப அலுவலகம் திறக்க உள்ளதாக தகவல் வெளியாது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஃபோர்பஸ் பத்திரிகையின் மதிப்பின்படி 8660 கோடி டாலராகும்.
மீன் வியாபாரிக்கு அடித்த யோகம்!! 2 மணிக்கு வங்கி கடன் நோட்டீஸ்,3.30 மணிக்கு லாட்டரி பரிசு
முகேஷ் அம்பானி ஏற்கெனவே மும்பையில் குடும்ப அலுவலகம் நடத்தி வரும் நிலையில் ஏன் சிங்கப்பூரில்புதிதாக அலுவலகம் திறக்கிறார் என்பது பலருக்கும் எழும் கேள்வியாக இருக்கிறது. முகேஷ் அம்பானி மட்டுல்ல இந்தியாவில் உள்ள பெரும்கோடீஸ்வரர்கள், ஸ்டர்ட்அப் நிறுவன அதிபர்கள் கூடதங்களின் குடும்ப அலுவலகத்தை வெளிநாடுகளில்தான் அமைத்து வருகிறார்கள்.
அறிக்கையின்படி, அம்பானி குடும்பத்தின் முதலீடுகள் பெரும்பாலும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸில்தான் இருக்கிறது. பெரும்பாலான ஒப்பந்தங்கள், நிறுவனங்களை கையகப்படுத்துதல் போன்றவை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மூலமாகவே நடக்கின்றன. ஆதலால், சிங்கப்பூரில் திறக்கப்படும் அலுவலகம், பெரும்பாலும் சர்வதேச அளவில் சொத்துக்கள் சேர்த்தலை மையாக வைத்தே திறக்கப்படுகிறது.
அதாவது முகேஷ் அம்பானி குடும்பத்தில் அடுத்த தலைமுறையினருக்கு சிக்கல் ஏதும் வராமல் இருப்பதற்காக முதலீட்டை பரவலாக்கவே வெளிநாட்டில் அலுவலகம் திறக்கப்டுகிறது. பெரிய ஆடிட்டர்கள், நிதிஆலோசகர்கள் கூற்றுப்படி, “ இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோடீஸ்வரர்கள், தங்கள் குடும்ப அலுவலகத்தை இந்தியாவைக் கடந்து சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் அமைத்து வருகிறார்கள்.
இந்திக்கு மொழிபெயர்க்கப்பட்ட எம்பிபிஎஸ் பாடங்கள்: மத்தியப்பிரதேசத்தில் அமித் ஷா அறிமுகம் செய்கிறார்
இதன் மூலம் தங்கள் சொத்துக்களுக்கான இடர்கள் குறையும், குறிப்பாக கரன்ஸி மதிப்பு சரிவு, புவியியல்ரீதியான இடர்பாடுகளைக் குறைக்கலாம். அது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறையினர் வரி செலுத்துதலை திட்டமிடலாம், சொத்து வரி, முதலீடு ஆதாய வரியும் துபாய், சிங்கப்பூரில் மிகக் குறைவு, தொழில், வர்த்தகம் செய்வது எளிது, குறிப்பாக கோடீஸ்வரர்களுக்கு சொத்துக்களை பாதுகாப்பாக வைத்திருக்க ஏதுவாக இருப்பதால் வெளிநாடுகளில் அலுவலகம் திறக்கப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் சிங்கப்பூர் அலுவலகம் அடுத்த ஆண்டு முதல் செயல்படத்த தொடங்கும் எனத் தெரிகிறது.
குடும்ப அலுவலகம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
குடும்ப அலுவலகம் இரு வகைப்படும். முதலாவதாக ஒற்றை குடும்ப அலுவலகம் இது அதிக சொத்து மதிப்புள்ள தனிநபர்களால் அமைக்கப்பட்ட ஒரு தனியார் சொத்து மேலாண்மை ஆலோசனை நிறுவனம். இதுபோன்ற நிறுவனங்கள் அந்தக் குடும்பத்தின் முதலீடு மற்றும் நிதித் தேவைகளுக்கு மட்டுமே உதவுகிறது. முகேஷ் அம்பானி இந்தவகை அலுவலகத்தையே அமைக்கஉள்ளார்.
இந்த அலுவலகத்தின்நோக்கம் சொத்துக்களை பாதுகாத்தல் புதிய சொத்துக்களை உருவாக்குதல்.
ஒற்றைக் குடும்ப அலுவலகம் தேவைப்படாதவர்கள், பன்முக குடும்ப அலுவலகத்தை தொடங்குவார்கள். ஆனால், இதில் குடும்ப அலுவலகம் போன்ற அமைப்பு முறை,சேவைகள் இருக்காது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில்: அதிவேக பார்சல் சர்வீஸ் விரைவில் தொடக்கம்
300 குடும்ப அலுவலகங்கள்
இந்தியாவில் மட்டும் 300 குடும்ப அலுவலகங்கள் உள்ளன. அதாவது இந்த 300 குடும்ப அலுவலகங்களில் இருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 10 கோடி டாலருக்கும் குறைவில்லாமல் சொத்து இருக்கும். சிலர் பெரும் கோடீஸ்வரர்களாக இருக்ககூடும். குறிப்பாக கெளதம் அதானி, ரத்தன் டாடா, பவன் முஞ்சல், அசிம் பிரேம்ஜி, என்ஆர் நாரயண மூர்த்தி, மரிவாலா குடும்பம் ஆகியவற்றுக்கு குடும்ப அலுவலகம் இருக்கிறது.
இதில் சமீபகாலங்களாக நடிகர்,நடிகைகள், விளையாட்டு வீரர்கள், ஊடக அதிபர்களுசேர்ந்துள்ளனர். யுவராஜ் சிங், பிரியங்கா சோப்ரா ஜோனாஸ், அக்சய் குமார், மாதுரி தீக்ஷித் நீனே, சச்சின் டெண்டுல்கர், ரிதேஷ் அகர்வால், குணால் பால், விஜய் எஸ் ஷர்மா, சச்சின் பன்சால், ராஜூல்கார் உள்ளிட்ட பலர் அலுவலகம் அமைத்துள்ளனர்.
சிங்கப்பூரில் குடும்ப அலுவலகம் உருவாக்குவதற்கான காரணம் என்னவென்றால், முதலீட்டுக்கு பாதுகாப்பான கட்டமைப்பு இருக்கிறது, தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற இடம், ஆசியாவின் நிதிமுதலீட்டு முனையம், வரிச் சலுகை திட்டம், முதலீட்டாளர்களுக்கு கூடுதல் சலுகை, வர்த்தகம்,தொழில்செய்பவர்களுக்கு ஏற்ற கொள்கை, சிறந்த கட்டமைப்பு வசதிகள் இருப்பதால்தான் சிங்கப்பூரில் அலுவலகம் அமைக்கிறார்கள்.
ஏழைகளுக்கு உதவுங்கள்!உலக பொருளாதாரம் ஆபத்தான மந்தநிலைக்கு செல்கிறது:உலக வங்கி எச்சரிக்கை
சிங்கப்பூர் நிதி ஆணையம் கணக்கெடுப்பின்படி, 2021ம் ஆண்டில் சிங்கப்பூரில் மட்டும் 700 குடும்ப அலுவலகங்கள் செயல்படுகின்றன, முன்பு 400 அலுவலகங்கள் இருந்தன. சிங்கப்பூரில் முதலீட்டாளர்களுக்கான வரி ஈர்க்கத்தக்கதாக இருக்கும், கார்ப்பரேட் வரி 17 சதவீதம்தான், இந்தியாவில் 30 சதவீதம் விதிக்கப்படுகிறது. ரூ.400 கோடிக்கு மேல் விற்றுமுதல் இருந்தால்தான் இந்தியாவில் 25% வரி விதிக்கப்படும்.
இப்போது புரிகிறதா ஏன் குடும்ப அலுவலகம் வெளிநாடுகளில் அமைக்கப்படுகிறதென்று….